
இந்தியாவின் நான்கு திசைகளிலும் அனுமன் சிலை அமைக்க மத்திய அரசு திட்டமிடப்பட்டு வந்தது. அதன்படி, முதல் சிலை வடக்குப் பகுதியான சிம்லாவில் கடந்த 2010-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. தொடர்ந்து இரண்டாவதாக குஜராத் மாநிலம் மோர்பியில் கேசவானந்த் ஆசிரமத்தில் பிரம்மாண்ட அனுமன் சிலை நிறுவப்பட்டு உள்ளது. இது நாட்டின் மேற்கு திசையில் நிறுவப்பட்டுள்ளது.
இந்த சிலையை அமைக்கும் பணி ரூ.10 கோடி செலவில் 2018-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பணிகள் முடிவடைந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலமாக இன்று திறந்து வைத்து பேசினார். அப்போது, ‘உங்கள் அனைவருக்கும், நாட்டு மக்களுக்கும் அனுமன் ஜெயந்தி வாழ்த்துக்கள். இந்த நல்ல சந்தர்ப்பத்தில் அனுமனின் இந்த பிரமாண்ட சிலை இன்று மோர்பியில் திறக்கப்பட்டுள்ளது. நாடு மற்றும் உலகம் முழுவதும் உள்ள அனுமன் பக்தர்களுக்கு இது மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.
அனுமன் அனைவரையும் தனது பக்தியால், தனது சேவையால் இணைக்கிறார். அனைவரும் உத்வேகம் பெறுகிறார்கள். ராமேஸ்வரத்திலும் நாட்டின் கிழக்கு பகுதியான மேற்கு வங்கத்திலும் அனுமன் சிலைகள் நிறுவப்படும் என நான் ஏற்கெனவே தெரிவித்திருந்தேன்' என்று பேசினார்.இந்தியாவில் 4 திசைகளிலும் அனுமன் சிலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன் படி முதல் சிலை வடக்கு பகுதியான சிம்லாவில் கடந்த 2018ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.