prashant kishor news: தேர்தல் வியூகவல்லுநர் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, எம்.பி.ராகுல் காந்தி, கே.சி.வேணுகோபால் ஆகியோரைச் சந்தித்துப் பேசியுள்ளார். இதனால் காங்கிரஸ் கட்சியில் சேரப்போவது குறித்து மீண்டும் பேச்சு நடத்துகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தேர்தல் வியூகவல்லுநர் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, எம்.பி.ராகுல் காந்தி, கே.சி.வேணுகோபால் ஆகியோரைச் சந்தித்துப் பேசியுள்ளார். இதனால் காங்கிரஸ் கட்சியில் சேரப்போவது குறித்து மீண்டும் பேச்சு நடத்துகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதற்கு முன்
பிரசாந்த் கிஷோர் இதற்குமுன் 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாகத் தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுத்தார்.அதன்பின் 2015ஆம் ஆண்டு நடந்த பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ், ஜேடியு, ஆர்ஜேடி சேர்ந்த மகா கூட்டணிக்கு ஆதரவாக பிரசாந்த் கிஷோர் செயல்பட்டு தேர்தலில் வெற்றி பெற வைத்தார். அந்தத் தேர்தல் முடிந்தபின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் பிரசாந்த் கிஷோர் இணைந்து அந்தக் கட்சியின் துணைத் தலைவரானார்.
ஆனால், கட்சியின் தலைவரும், பிஹார் முதல்வருமான நிதிஷ் குமாருக்கும், பிரசாந்த் கிஷோருக்கும் இடையே உரசல் ஏற்பட்டதையடுத்து, அந்தக் கட்சியிலிருந்து கடந்த ஆண்டு பிரசாந்த் கிஷோர் விலகினார்.
கடும் விமர்சனம்
மேற்கு வங்கத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகத் தேர்தல் பணியில் ஈடுபட்ட பிரசாந்த் கிஷோர், தேர்தல் முடிந்தபின் தன்னுடைய நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருந்து விலகிவிட்டார். இதையடுத்து காங்கிரஸ் கட்சியில் முறைப்படி சேரப்போவதாகத் தகவல்கள் வெளியாகின.
அதற்கு ஏற்ப கடந்த ஆண்டு ஜூலை மாதம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியைச் சந்தித்துப் பேசி காங்கிரஸ் கட்சியோடு பிரசாந்த் கிஷோர் நெருக்கத்தை அதிகப்படுத்தினார்.
ஆனால் மேற்கு வங்கத்தில் தேர்தல் முடிந்தபின் காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளையும், செயல்பாடுகளையும் கடுமையாக பிரசாந்த் கிஷோர் விமர்சிக்கத் தொடங்கினார். வெளிப்படையாக ராகுல் காந்தி, சோனியா காந்தியையும் பிரசாந்த் கிஷோர் விமர்சித்தார். மத்தியில் ஆளும் பாஜகவை இப்போதுள்ளகாங்கிரஸ் கட்சியால் வீழ்த்த முடியாது என்று கடுமையாக பிரசாந்த் கிஷோர் விமர்சித்தார். இதனால் காங்கிரஸ் கட்சியில் பிரசாந்த் கிஷோர் சேர்வது சந்தேகம் என தகவல்கள் வெளியாகின.
மீ்ண்டும் பேச்சுவார்த்தை
இந்தச் சூழலில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மூத்த தலைவர் கேசி.வேணுகோபால் ஆகியோரைச் சந்தித்து பிரசாந்த் கிஷோர் ஆலோசனை நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகின.
2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பை சரி செய்வது, அதை சீரமைப்பது குறித்து சோனியா காந்தி, ராகுல் காந்தியிடம் ஆலோசனை நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
2024மக்களவைத் தேர்தல்
பிரசாந்த் கிஷோர் தரப்பில் கூறுகையில் “ இந்த ஆண்டு இறுதியில் குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க இருக்கிறது அதுகுறித்து முக்கியமாகப் பேசப்பட்டு வருகிறது. இருப்பினும், 2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முக்கியத்துவம் அளித்துதான் பேச்சு நகர்ந்து வருகிறது. 2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் குறித்து பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் இடையே ஒப்பந்தம் நடந்துவிட்டால், குஜராத் தேர்தல் மட்டுமின்றி எந்த மாநிலத்தில் தேர்தல் நடந்தாலும் அது கிஷோரின் பொறுப்புக்குள் வந்துவிடும்” எனத் தெரிவிக்கின்றன
ஆலோசகரா
ஆனால் காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தரப்பில் கூறுகையில் “ பிரசாந்த் கிஷோர் குஜராத் தேர்தல் அல்லது 2024 மக்களவைத் தேர்தல் இதில் ஏதாவது ஒன்றில்தான் பணியாற்றுவேன் என்கிறார். அதுமட்டுமல்லாமல் காங்கிரஸ் கட்சியை மறுசீரமைக்கும் பணியில் பிரசாந்த் கிஷோர் விருப்பமாக இருக்கிறார். ஆனால், காங்கிரஸ் கட்சியில் சேர்வதற்குப் பதிலாக ஆலோசனையாளராகவே இருக்க கிஷோர் விரும்புகிறஆர். ஆனால் மே 2ம் தேதிக்குக்குள் பிரசாந்த் கிஷோர் தனது முடிவை தெரிவிப்பார் என எதிர்பார்க்கிறோம்” எனத் தெரிவித்தனர்.