corona in india :டெல்லி, டெல்லி என்சிஆர், மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் மீண்டும் பரவத் தொடங்கி இருப்பதால், மக்கள் முகக்கவசம், சமூக விலகலைக் கடைபிடிக்க வேண்டும் என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
டெல்லி, டெல்லி என்சிஆர், மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் மீண்டும் பரவத் தொடங்கி இருப்பதால், மக்கள் முகக்கவசம், சமூக விலகலைக் கடைபிடிக்க வேண்டும் என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
ஒமைக்ரான் வைரஸின் ஒமைக்ரான் எக்ஸ்இ, பிஏ.2 ஆகிய வைரஸ்கள் அதிவேகமாகப் பரவும் தன்மை கொண்டவை. இந்த வைரஸ்கள்தான் பரவி வருகின்றன.
undefined
முகக்கவசம் அவசியம்
ஹைதராபாத்தில் உள்ள யசோதா மருத்துவமனையில் நுரையீரல் பிரிவு சிறப்பு நிபுணர் கூறுகையில் “ மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு வந்துவிட்டதால், முகக்கவசம், சமூக விலகல் ஆகியவற்றை அணிவதில் விலக்கு, தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்யவேண்டும், ஒருவேளை தொற்றுக்கான அறிகுறிகள் ஏதேனும் இருந்தால், உடனடியாக தனிமையில் இருந்து, தொற்றின் தீவிரத்தைக் குறைக்க வேண்டும்.
வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக தொற்று அதிகரித்து வருகிறது. இதில் பெரும்பாலும் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டே சிகிச்சையில் உள்ளனர். ஆனால் முதியோர், நீரிழிவு நோய் உள்ளோர், இதயநோயாளிகள் ஆகியோர் தொற்றால் பாதிக்ககப்பட்டால் அவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்
பாசிட்டிவ்வீதம் அதிகரிப்பு
டெல்லியில் கொரோனா பாசிட்டிவ் ரேட் கடந்த1ம் தேதி 0.57 சதவீதமாக இருந்தது, 14ம் தேதி நிலவரப்படி 2.39% அதிகரித்துள்ளது. வீடுகளில் தனிமைப்படுத்தி சிகிச்சை எடுப்போர் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. இதேபோன்ற சூழல் நாட்டின் பிறபகுதிகளுக்கும்வரும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
அச்சப்பட வேண்டாம்
டெல்லியில் உள்ள ஐபிஎஸ் மருத்துவமனையின் நரம்பியல்அறுவை சிகிச்சை வல்லுநர் மருத்துவர் சச்சின் காந்தாரி கூறுகையில் “ கடந்த சில வாரங்களாக கோவிட்டின் எக்ஸ்இ வைரஸ் தீவிரமடைந்துள்ளது, இந்த வைரஸின் முழுவிவரம் தெரியவி்ல்லை. தொற்று பாதிப்பு வேகம் மெல்ல அதிகரித்துவருகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதும் குறைவாகத்தான் இருக்கிறது.
ஆதலால் யாரும் அச்சப்படத்தேவையில்லை. ஆனால், மக்கள் வெளியே செல்லும்போது முறையான தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம், சானிடைசர், சமூக இடைவெளியை பயன்படுத்த வேண்டும். தடுப்பூசி செலுத்துவதில் அனைவரும் கவனம் செலுத்தி முழுமையாகச் செலுத்த வேண்டும்” எனத் தெரிவித்தார்
மக்களின் பொறுப்பின்மை
கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஷாரதா மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் மருத்துவர் ஏ.கே. கட்பாயல் கூறுகையில் “ மக்கள் கூட்டமாகக் கூடுவது அதிகரிப்பு, முகக்கவசம் அணிய மறுப்பு, தனிநபர் சுத்தம் குறைதல், அறியான்மை, தடுப்பூசி செலுத்துவதில் தயக்கம் ஆகியவைதான் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க காரணம். ஆனால், தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு தொற்று ஏற்பட்டால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய சூழலும் ஏற்படும்” எனத் தெரிவித்தார்