300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டம்... எப்போ தொடங்குது தெரியுமா?

Nandhini Subramanian   | Asianet News
Published : Apr 16, 2022, 10:23 AM ISTUpdated : Apr 16, 2022, 12:06 PM IST
300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டம்... எப்போ தொடங்குது தெரியுமா?

சுருக்கம்

டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் அருமையான சந்திப்பு நடைபெற்றது. விரைவில், பஞ்சாப் மாநில மக்களுக்கு ஒரு நற்செய்தியை தெரிவிக்கிறேன் என பகவந்த் மமான் தனது டுவிட்டரில் பதிவிட்டு இருந்தார்.   

பஞ்சாபில் ஆளும் கட்சியான ஆம் ஆத்மி வீடுகளுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் பற்றி முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. அதன்படி பஞ்சாப் மாநிலத்தில் ஜூலை 1 ஆம் தேதி முதல் ஒவ்வொரு வீட்டிற்கும் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்பட இருக்கிறது. 

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அம்மாநில முதல்வராக பொறுப்பேற்று ஒரு மாதம் நிறைவுற்றதை கொண்டாடும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. கடந்த செவ்வாய் கிழமை பகவந்த் மான் விரைவில் பஞ்சாப் மாநில மக்களுக்கு ஒரு நற்செய்தியை தெரிவிக்க இருப்பதாக அறிவித்து இருந்தார்.

"நம் தலைவர் மற்றும் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் அருமையான சந்திப்பு நடைபெற்றது. விரைவில், பஞ்சாப் மாநில மக்களுக்கு ஒரு நற்செய்தியை தெரிவிக்கிறேன்," என பகவந்த் மமான் தனது டுவிட்டரில் பதிவிட்டு இருந்தார். 

தேர்தல் வாக்குறுதி:

பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட ஆம் ஆத்மி, வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் மாநில மக்கள் ஒவ்வொருத்தர் வீடுகளுக்கும் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவதாக வாக்குறுதி அளித்து இருந்தது. ஆம் ஆத்மி தேர்தல் வாக்குறுதிகளில் 300 யூனிட் இலவச மின்சாரம் மிகவும் முக்கியத் துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்பட்டது. 

மாநிலத்தில் தேவைக்கு அதிகமாகவே மின் உற்பத்தி நடைபெற்று வந்தாலும், நீண்ட நேர மின்வெட்டு மற்றும் மிக கடுமையான மின் கட்டணங்கள் மக்களை வாட்டி வதைத்து வருகின்றன என்று டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார். இதை அடுத்தே இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் பற்றி தெரிவித்தார்.

மின் திருட்டு:

"கிராமங்களில் பலருக்கு தவறான மின் கட்ட ரசீது வழங்கப்பட்டு வருகிறது. மின் கட்டணம் செலுத்தாத பட்சத்தில் பலரின் மின் இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டு இருக்கின்றன. இவ்வாறு மின் இணைப்பு துண்டிப்பு காரணமாக பாதிக்கப்பட்டோர் மின் திருட்டில் ஈடுபட தூண்டப்படுகின்றனர்," என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்து இருந்தார்.

டெல்லி மாநிலத்தில் ஆம் ஆத்மி அரசாங்கம் ஒவ்வொரு மாதமும் 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கி வருகிறது. இலவச மின்சாரம் மட்டும் இன்றி ரேஷன் பொருட்களை வீட்டிற்கு வினியோகம் செய்யும் திட்டத்தையும் பஞ்சாப் சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியில், ஆம் ஆத்மி கட்சி தெரிவித்து இருந்தது. இதுவும் பொது மக்கள் இடையே முக்கிய வாக்குறுதியாக பார்க்கப்பட்டு வந்தது.

வேலை வாய்ப்பு:

பஞ்சாப் முதல்வராக பொறுப்பேற்ற பின் முதல்வர் பகவந்த் மான், மாநில அரசு துறையில் சுமார் 25 ஆயிரம் வேலை வாய்ப்புகள் இருப்பதாக அறிவித்தார். இதில் 10 ஆயிரம் வேலை வாய்ப்புகள் போலீஸ் துறையில் மட்டும் இருப்பதாக அவர் தெரிவித்து இருந்தார். 

கடந்த மாதம் நடைபெற்ற பஞ்சாப் மாநில சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 92 இடங்களை பிடித்து பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. முந்தைய ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் சட்டமன்ற தேர்தலில் 18 இடங்களையே பிடித்தது.

PREV
click me!

Recommended Stories

பீகாரில் திருப்பதி கோயில்! 1 ரூபாய்க்கு 10.11 ஏக்கர் நிலம் வழங்கிய நிதிஷ் குமார்!
சாவு எப்படியெல்லாம் வரும் பார்த்தீங்களா! நியூயார்கில் இந்திய மாணவி உயிரி**ழப்பு! நடந்தது என்ன?