
புதுச்சேரி விரைவு ரயில் 3 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பயணிகளுக்கு எந்த வித காயமின்றி அதிஷ்டவசமாக உயிர் தப்பினார்.
ரயில் தடம் புரண்டு விபத்து
புதுச்சேரியில் இருந்து மும்பைக்கு தாதர்-புதுச்சேரி எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டு வருகிறது. சனிக்கிழமை இரவு இந்த ரயில் மும்பை மாட்டுங்கா ரயில் நிலையம் அருகே வந்துக்கொண்டிருந்த போது 3 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
காயமின்றி உயிர் தப்பிய பயணிகள்
தகவல் அறிந்து உடடியாக விரைந்த ரயில்வே போலீசார் மற்றும் பணியாளர்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் எந்த ஒரு உயிரிழப்போ, காயமோ ஏற்படவில்லை. அனைத்து பயணிகளும் அவர்களது உடமைகளும் பாதுகாப்பாக உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரயில் போக்குவரத்து பாதிப்பு
விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. தடம் புரண்ட பெட்டிகளை அகற்றும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதற்கட்ட விசாரணையில் புறப்பட்ட சிறிது நேரத்தில் அடுத்த தண்டவாளத்தில் சென்ற ரயிலுடன் உரசியதால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்து காரணமாக ரயில் போக்குவரத்து பல மணி நேரம் பாதிக்கப்பட்டது.