
ராமர் கடவுள் இல்லை, ஒரு கதையின் கதாபாத்திரம்தான் என்று பிஹாரின் முன்னாள் முதல்வரும் பாஜகவின் கூட்டணிக் கட்சியின் தலைவரான ஜிதன் ராம் மன்ஜி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடவுள் ராமருக்காக அயோத்தியில் கோயில் எழுப்ப போராடி வருகிறது பாஜக, ஆனால் பிஹாரில் அந்தக்கட்சியின் கூட்டணியில் இருக்கும் ஒரு கட்சியின் தலைவர் ராமர் கடவுளே இல்லை என்று கூறியது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்துஸ்தான் அவாமி மோர்ச்சா கட்சியின் தலைவரான ஜிதன் ராம் மஞ்சியின் மகன் சந்தோஷ் மஞ்சி, பிஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக இருக்கிறார்
டாக்டர் அம்பேத்கரின் பிறந்நாள் விழா நேற்று பாட்னாவில் நடந்தது. அதில் இந்துஸ்தான் அவாமி மோர்ச்சா கட்சியின் தலைவரான ஜிதன் ராம் மஞ்சி பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில் “ வால்மீகி, ராமயானத்தை எழுதினார், அவரின் எழுத்தில் ஏராளமான நல்ல அம்சங்கள் அடங்கியுள்ன, அதை நாம் நம்புவோ்ம். வால்மீகி, துளிசிதாஸையும் நம்புவோம். ஆனால், ராமரை அல்ல. ராமர் கடவுள் அல்ல. கதையில் வரும் கதாபாத்திரம்.
நீங்கள் ராமரை நம்பினால், கதையில் சபரி கடித்துவிட்டு வழங்கிய எச்சில் பழத்தை ராமர் சாப்பிட்டார் என்று கதையில் வருகிறது. ஆனால் நாங்கள் கடித்துக் கொடுத்த பழத்தை நீங்கள் சாப்பிடமாட்டீர்கள், ஆனால் எங்கள் கைதொட்டுக் கொடுத்த பழத்தையாவது சாப்பிடுங்கள்
உலகிலேயே இரு சாதியினர்தான் உள்ளனர். ஒன்று பணக்காரர்கள், 2-வது ஏழைகள். ஆனால், தாழ்த்தப்பட்ட மக்களை தொடர்ந்து துன்புறுத்துகிறார்கள்” எனத் தெரிவித்தார்
ராமநவமி கொண்டாட்டத்தின் போது குஜராத், மத்தியப்பிரதேசம், ஜார்க்கண்ட், மே.வங்கத்தில் கலவரம் ஏற்பட்டு, 2 பேர் கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்தனர். இந்தப் பதற்றம் தணிந்துள்ளநிலையில், ஜிதன் ராம் மஞ்சி சர்ச்சையாகப் பேசியுள்ளார்.