warm vaccine:இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட ‘வார்ம் வேக்ஸின்’: டெல்டா, ஒமைக்ரானுக்கு எதிராக சிறப்பான செயல்பாடு

By Pothy Raj  |  First Published Apr 16, 2022, 5:51 PM IST

warm vaccine  : குளிர்பதனவசதி தேவையில்லாத வகையில் எந்த வெப்பநிலையிலும் வைக்கக்கூடிய கொரோனா தடுப்பூசி இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டெல்டா, ஒமைக்ரானுக்கு எதிராக மிகவலிமையான நோய் எதிர்ப்புச் சக்திகளை இந்தத் தடுப்பூசி உருவாக்குகிறது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.


குளிர்பதனவசதி தேவையில்லாத வகையில் எந்த வெப்பநிலையிலும் வைக்கக்கூடிய கொரோனா தடுப்பூசி இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டெல்டா, ஒமைக்ரானுக்கு எதிராக மிகவலிமையான நோய் எதிர்ப்புச் சக்திகளை இந்தத் தடுப்பூசி உருவாக்குகிறது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் மையம், மற்றும் ஸ்டார்ட்அப்நிறுவனம் மைன்வேக்ஸ் ஆகியவை இணைந்து இந்த தடுப்புருந்தைக் கண்டுபிடித்தனர்.இந்த மருந்து எலிகளுக்குசெலுத்தி பரிசோதனை செய்ததில் நல்ல விளைவு தெரிந்தது. 

Tap to resize

Latest Videos

undefined

கொரோனா வைரஸுக்கு எதிராகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள தடுப்பு மருந்துகள் அனைத்தையும் குளிர்சாதனப்பெட்டியில் வைத்து பாதுகாக்க வேண்டும்அப்போதுதான் மனிதர்கள்உடலில் செலுத்தும்போது அது செயலாற்றும். ஆனால், இந்த தடுப்பூசியை அதிபட்சமாக 37 டிகிரி செல்சியஸ் வெப்பத்திலும் 4 வாரங்கள் வரை வைக்கலாம், 100 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் 90 நிமிடங்கள் வரை வைக்கலாம்.

ஆனால், ஆக்ஸ்போர்ட் அஸ்ட்ராஜென்காவின் கோவிஷீல்ட் தடுப்பூசியை 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் குளிரில் வைக்க வேண்டும், பைசர் தடுப்பூசியை மைனஸ் 70 டிகிரி குளிரில் வைக்க வேண்டும்.

இந்த தடுப்பு மருந்து குறித்த அம்சங்கள் அனைத்தும் வைரஸஸ் எனும் இதழலில் வெளியாகியுள்ளது. எலிகளுக்கு மருந்தை செலுத்தியதில், கொரோனா வைரஸுக்கு எதிராக குறிப்பாக டெல்டா, ஒமைக்ரானுக்கு எதிராக சிறப்பாகச் செயல்படுகிறது. 

இந்த மருந்து இன்னும் மனிதர்களுக்கு செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்படவில்லை. ஆனால், முதல்கட்ட கிளினிக்கள் பரிசோதனைக்கு இந்த மருந்து தகுதியானது, ஏற்கெனவே இருக்கும் கொரோனா வைரஸ் உருமாற்றங்களுக்கும், எதிர்வரும் உருமாற்ற வைரஸ்களுக்கு எதிராகவும் இந்த தடுப்பு மருந்து சிறப்பாகச் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பு மருந்தின் வெப்பம் தாங்கும் தன்மை, வெப்பச்சமமின்மை தாங்கும் திறன்  ஆகியவை தடுப்பூசி கிடைக்காத பல்வேறு நாடுகளுக்கும் கிடைக்கவும், தடுப்பூசி சமத்துவமின்மையை களையவும் தடுப்பூசி உதவும் என ஆய்வறிக்கையில் தெரிவி்க்கப்பட்டுள்ளது

click me!