பொண்டாட்டி தூக்கில தொங்குறா… சாவகாசமாக வீடியோ எடுத்து ஷேர் செய்த கணவன்…

Published : Sep 25, 2021, 07:26 PM IST
பொண்டாட்டி தூக்கில தொங்குறா… சாவகாசமாக வீடியோ எடுத்து ஷேர் செய்த கணவன்…

சுருக்கம்

ஆந்திராவில் பொண்டாட்டி தூக்கில் தொங்குவதை வீடியோ எடுத்து ஷேர் செய்த கணவனை பிடித்து உள்ளே தள்ளியிருக்கிறது காவல்துறை.

நெல்லூர்: ஆந்திராவில் பொண்டாட்டி தூக்கில் தொங்குவதை வீடியோ எடுத்து ஷேர் செய்த கணவனை பிடித்து உள்ளே தள்ளியிருக்கிறது காவல்துறை.

கணவன், மனைவி இடையே தகராறு, வாய் பேச்சு என்பது இன்னமும் பல குடும்பங்களில் சகஜமான ஒன்றாக மாறிவிட்டது. குடும்பம் என்றால் அப்படி, இப்படி தான் இருக்கும் என்றும் சொல்வது உண்டு.

ஆனால் பொண்டாட்டி கோபித்து கொண்டு தற்கொலை செய்ய தூக்கில் தொங்கும் போது அதை வீடியோ எடுத்து கணவன் எல்லாருக்கும் அனுப்பினால் எப்படி இருக்கும். அப்படி ஒரு சம்பவம் ஆந்திர மாநிலம் நெல்லூரில் நடந்து அதிர வைத்திருக்கிறது.

நெல்லூர் மாவட்டம் அட்மகூர் நகரை சேர்ந்தவர் பெஞ்சலைய்யா. அவரது மனைவி கொண்டம்மாள். மனைவி நடத்தை மீது பெஞ்சலைய்யாவுக்கு எக்கச்செக்க சந்தேகம். அவ்வப்போது சண்டையும் வந்திருக்கிறது.

வழக்கம் போல இருவருக்கும் முட்டிக் கொள்ள, கொண்டம்மாள் தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறிவிட்டு தூக்கில் தொங்க முடிவெடுத்தார். அதை அறிந்த கணவன் பெஞ்சலைய்யா தடுக்கமாட்டேன் என்றும், அப்படி செய்தால் வீடியோ எடுத்து சகோதரனுக்கு அனுப்பி வைப்பேன் என்றும் கூறி இருக்கிறார்.

எப்படியாவது கணவர் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையில் கயிற்றில் தொங்கி இருக்கிறார் கொண்டம்மாள். ஆனால் பெஞ்சலைய்யாவே அதை சாவகாசமாக வீடியோ எடுத்து மனைவியுன் சகோதரனுக்கு ஷேர் செய்திருக்கிறார். கணவன் காப்பாற்றுவார் என்று எதிர்பார்த்த கொண்டம்மாள் துடிதுடித்து இறந்து போனார்.

இந்த வீடியோ அதிகளவு பகிரப்பட விவரம் அறிந்த ஆந்திரா காவல்துறை பெஞ்சலைய்யாவை பிடித்து உள்ளே வைத்திருக்கிறது. மனைவி தற்கொலை செய்யும் போது தடுக்காமல் வீடியோ எடுத்த கணவனின் நடவடிக்கை பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

PREV
click me!

Recommended Stories

Aadhaar Ban: இனி 18 வயசுக்கு மேல யாருக்கும் ஆதார் கிடையாது! அதிரடி முடிவு எடுத்த அரசு!
Magalir Urimai Thogai: மகளிர் உரிமைத் தொகையில் மெகா மோசடி.! 4.30 லட்சம் பயனாளர்கள் நீக்கம்.! கர்நாடக அரசு எடுத்த அதிரடி முடிவு.!