3ம் பாலினத்தவர்களுக்காக மத்திய அரசின் ‘ஸ்மார்ட்’ வேலை…. வெளியான புதிய தகவல்

By manimegalai aFirst Published Sep 25, 2021, 6:43 PM IST
Highlights

3ம் பாலினத்தவர்களை ஓபிசி பட்டியலில் சேர்க்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது.

டெல்லி: 3ம் பாலினத்தவர்களை ஓபிசி பட்டியலில் சேர்க்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது.

உலகில் பல நாடுகளில் 3ம் பாலினத்தவர்களை தனி சமூகமாக அங்கீரித்து உள்ளனர். இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் அவை இன்னமும் முழுமை பெறவில்லை.

கல்வி, வேலைவாய்ப்பு என அவர்களுக்கான உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருவதாக பல்வேறு சம்பவங்கள் மூலமாக நிரூபிக்கப்பட்டு வருகிறது. இந் நிலையில் இட ஒதுக்கீடு பெறுவதற்கு ஏற்ற வகையில் 3ம் பாலினத்தவர்களை ஓபிசி எனப்படும் இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க மத்திய அரசின் சமூக நீதித்துறை முடிவு செய்திருக்கிறது.

அதன்படி சமூக நீதித்துறையானது ஓபிசி பட்டியலில் அவர்களை சேர்ப்பதற்கான வரைவு அறிக்கையை (draft) மத்திய அரசிடம் அனுப்பி இருக்கிறது.

ஓபிசி பிரிவினருக்கான 27 சதவீதம் இட ஒதுக்கீட்டில் 3ம் பாலினத்தவர்கள் பயன் அடைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அறிக்கையின் மீது எடுக்கப்படும் முடிவு குறித்து நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்படும். அதன் பின்னர் அது சட்ட திருத்தம் என ஏற்கப்பட்டு குடியரசு தலைவரின் ஒப்புதலுடன் நிறைவேற்றப்படும்.

click me!