மருத்துவ படிப்பில் உயர்சாதி ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு உண்டா…? இல்லையா? உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

By manimegalai aFirst Published Sep 24, 2021, 8:13 PM IST
Highlights

மருத்துவ படிப்பில் உயர்சாதி எழைகளுக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.

மருத்துவ படிப்பில் உயர்சாதி எழைகளுக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.

மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களில், ஓ.பி.சி. பிரிவினருக்கான இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து குழு அமைத்து முடிவெடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2020 ஜூலையில் உத்தரவிட்டது. மத்திய அரசு இந்த உத்தரவை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி திமுக சார்பில் மத்திய அரசின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி நீதிபதி ஆதிகேசவலு அமர்வு, மருத்துவ படிப்பில் அகில இந்திய இட ஒதுக்கீட்டில் உயர்சாதி ஏழைகளுக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதை உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு இல்லாமல் மேற்கொள்ளக் கூடாது என்றும் உத்தரவிட்டனர்.

இந்தநிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து, மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த  உச்ச நீதிமன்றம், உயர்சாதி ஏழைகளுக்கான 10 சதவிகித இட ஒதுக்கீட்டை, உச்ச நீதிமன்ற ஒப்புதலுடன் அமல்படுத்த வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர்.

மருத்துவ படிப்பில் உயர்சாதி ஏழைகளுக்கான இட ஒதுக்கீட்டை மத்திய அரசின் அரசாணையை பின்பற்றி செயல்படுத்தலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் மருத்துவபடிப்பில் ஓ.பி.சி. பிரிவினருக்கு இடஒதுக்கீட்டை அமல்படுத்துவது தொடர்பாக தாங்கள் கருத்து கூற விரும்பவில்லை என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

click me!