1944ம் ஆண்டை நினைவுபடுத்தும் ‘அந்த’ சம்பவம்… விடிய, விடிய டெல்லி பட்ட பாடு…

By manimegalai aFirst Published Sep 24, 2021, 8:26 AM IST
Highlights

டெல்லியில்  விடிய, விடிய பெய்த பலத்த நகரமே பெரும் தத்தளிப்புக்கு ஆளாகி இருக்கிறது.

டெல்லி: டெல்லியில்  விடிய, விடிய பெய்த பலத்த நகரமே பெரும் தத்தளிப்புக்கு ஆளாகி இருக்கிறது.

தலைநகர் டெல்லியில் நேற்று மாலை முதல் மழையோ, மழைதான். விடாது பெய்த மழை மக்களை பாடாய்படுத்தி எடுத்துவிட்டது. கிட்டத்தட்ட விடிய, விடிய விடமாட்டேன் என்று போட்டு தள்ளிய கனமழையால் தலைநகரமே மழைநீரால் தத்தளித்து வருகிறது. தற்போது வரை அங்கு மழை நீடித்து வருவதாகவும், இந்த மழை இன்றும் நீடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

டெல்லியின் முக்கிய பகுதிகள், சாலைகள் வெள்ள நீரால் மிதக்கின்றன. அக்பர் சாலை உள்ளிட்ட பல இடங்களில் மழைநீர் தேங்கி கிடப்பதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகன ஓட்டிகள் படாது பாடுபட்டு வருகின்றனர்.

கிட்டத்தட்ட 1944ம் ஆண்டுக்கு பிறகு செப்டம்பர் மாதத்தில் ஒரே நாளில் இப்படி மழையை சந்தித்து இல்லை தலைநகரம் டெல்லி. 1944ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முழுவதும் பதிவான மழை அளவு 417.3 மில்லி மீட்டர் மழையாகும்.

இன்றும் டெல்லியில் மழை போட்டு தாக்கினால் இந்த சாதனை முறியடிக்கப்பட்டுவிடும் என்று வானிலை மைய அறிஞர்கள் தெரிவித்துள்ளனர். முன்னதாக நேற்றைய காலை 8.30 மணி நிலவரப்படி டெல்லியில் செப்டம்பர் மாதம் 408.3 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

click me!