தமிழ்நாட்டிற்கு வாரத்திற்கு இத்தனை லட்சம் தடுப்பூசிகளா….? திமுக எம்.பி.-யிடம் உறுதியளித்த மத்திய அமைச்சர்…!

By manimegalai aFirst Published Sep 23, 2021, 7:34 PM IST
Highlights

தகுதியான அனைவருக்கும் தடுப்பூசி திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வாரம்தோறும் 50 லட்சம் டோஸ்களை வழங்குமாறு மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

தகுதியான அனைவருக்கும் தடுப்பூசி திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வாரம்தோறும் 50 லட்சம் டோஸ்களை வழங்குமாறு மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா மூன்றாவது அலையை தடுக்க் தமிழ்நாட்டில் தடுப்பூசி திட்டம் விரைந்து செயல்படுத்தப்படுகிறது. அதன் ஒருபகுதியாக வரும் ஞாயிற்றுக்கிழமை மூன்றாவது மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று கூறியுள்ள மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அன்றைய தினம் 15 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

இதனிடையே தடுப்பூசி திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் தமிழ்நாட்டிற்கு தடுப்பூசிகளை வழங்குவதில் மத்திய அரசு தொடர்ந்து பாரபட்சம் காட்டுவதாக தொடர்ச்சியாக புகார் கூறப்படுகிறது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை திமுக எம்.பி. டி.ஆர். பாலு நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த சந்திப்பு தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டி.ஆர். பாலு, தமிழ்நாட்டிற்கு வாரம்தோறும் 50 லட்சம் டோஸ் தடுப்பூசி வழங்க கோரிக்கை வைத்துள்ளதாகக் கூறினார். தமிழகத்தில் இதுவரை 4 கோடி தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு சராசரியாக 5 லட்சம் டோஸ்கள் போடப்படுவதால் தமிழ்நாட்டிற்கான தடுப்பூசி விநியோகத்தை அதிகரிக்க மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தியதாகவும், வாரம்தோறும் 50 லட்சம் தடுப்பூசி வழங்க மத்திய அமைச்சர் உறுதியளித்துள்ளதாகவும் டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநில அரசுகளே நிவாரணம் வழங்க வேண்டும் என்ற மத்திய அரசின் நிலைப்பாடு பொறுப்பற்ற செயல் என்று விமர்சித்த டி.ஆர்.பாலு, மத்திய அரசு தமது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

click me!