திமுக எம்.பி.-க்களை தரக்குறைவாக நடத்திய விவகாரம்…. முன்னாள் தலைமை செயலர் விளக்கம்…!

Published : Sep 23, 2021, 06:08 PM IST
திமுக எம்.பி.-க்களை தரக்குறைவாக நடத்திய விவகாரம்…. முன்னாள் தலைமை செயலர் விளக்கம்…!

சுருக்கம்

மக்கள் பிரச்சினைகளை கூறவந்த தங்களை தலைமைச் செயலர் தரக்குறைவாக நடத்தியாதாக திமுக எம்.பி.-க்கள் புகார் கூறியிருந்தனர்.

மக்கள் பிரச்சினைகளை கூறவந்த தங்களை தலைமைச் செயலர் தரக்குறைவாக நடத்தியாதாக திமுக எம்.பி.-க்கள் புகார் கூறியிருந்தனர்.

நாடு முழுவதும் கொரோனா பரவத் தொடங்கிய கடந்த 2020-ல் “ஓன்றிணைவோம் வா” என்ற திட்டத்தில் திமுக-வினர் மக்கள் நலப்பணிகளை மேற்கொண்டன்ர். அப்போது பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட ஒரு லட்சம் மனுக்களை திமுக எம்.பி.-க்கள் டி.ஆர். பாலு, தயாநிதிமாறன் உள்ளிட்டோர் அப்போதைய தமிழ்நாட்டில் தலைமைச் செயலர் சண்முகத்திடம் நேரில் சென்று வழங்கினர். அப்போது தலைமைச் செயலர் தங்களை மரியாதை குறைவாக நடத்தியதாகவும், கடுமையான குரலில் தங்களுக்கு பதிலளித்ததாகவும் திமுக எம்.பி.-க்கள் குற்றஞ்சாட்டினர்.

தலைமை செயலாளர் சண்முகம், மன்னிப்பு கேட்க வேண்டும, இல்லையென்றால் இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்திற்கு கொண்டு செல்வோம் என்றும் எம்.பி-கள் கூறி இருந்தனர்.  குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளித்த சண்முகம், மன்னிப்பு கேட்காததால் மக்களவை சபாநாயகரிடம் திமுக எம்.பி.-க்கள் புகார் அளித்தனர். இதனையடுத்து, இந்த விவகாரத்தை, நாடாளுமன்ற உரிமைக் குழு விசாரிக்க பரிசீலனை செய்யப்பட்டது. கடந்த, செப்டம்பர் 24ம் தேதி, உரிமை குழுவிடம் திமுக எம்.பி-கள் நேரில் ஆஜராகி,  விளக்கம் அளித்தனர். அவர்களின் குற்றச்சாட்டை, விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உரிமை குழு, முன்னாள் தலைமை செயலாளர் சண்முகத்தை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பியது.

 இந்தநிலையில், முன்னாள் தலைமை செயலாளர் சண்முகம், டெல்லியில் நாடாளுமண்ற உரிமை குழு தலைவர் சுனில் குமார் சிங் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். திமுக எம்.பி.-க்களை மரியாதை குறைவாக நடத்தியதாக கூறப்படும் புகார் தொடர்பாக, முன்னாள் தலைமை செயலாளர் சண்முகம் விளக்கம் அளித்துள்ளார். இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து நாடாளுமன்ற உரிமைக் குழு விரைவில் அறிவிப்பு வெளியிடும் என்று கூறப்படுகிறது.

PREV
click me!

Recommended Stories

கோவா தீ விபத்து: உயிரிழந்தோருக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் – பிரதமர் மோடி அறிவிப்பு!
இன்றும் விமான ரத்துகள் இருக்கலாம்.. இண்டிகோவுக்கு டிஜிசிஏவின் அதிரடி நோட்டீஸ்! எப்போது சரியாகும்?