பாத்தீங்களா..? இதுக்குதான் ‘நீட்’ வேண்டாம்னு சொல்றோம்… சிபிஐ கண்டுபிடித்த விஷயம்

By manimegalai aFirst Published Sep 23, 2021, 6:42 AM IST
Highlights

மகாராஷ்டிராவில் நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்திருப்பதை சிசிஐ கண்டுபிடித்துள்ள விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மும்பை: மகாராஷ்டிராவில் நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்திருப்பதை சிசிஐ கண்டுபிடித்துள்ள விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நாடு முழுவதும் கடந்த 12ம் தேதி மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு நடந்தது. இந்த தேர்வு கட்டாயம் என்பதால் பயிற்சி மையங்கள் இஷ்டம் போல் பெருகின. மோசடிகளும் நடைபெறும் வாய்ப்புகள் உள்ளதாகவும் குரல்கள் எழுந்தன.

நீட் தேர்வு வேண்டாம், ரத்து செய்யுங்கள் என்று தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் சட்ட போராட்டத்தை கையில் எடுத்துள்ளன. இந் நிலையில் கடந்த 12ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. சிபிஐ விசாரணையில் இந்த முறைகேடு நடந்திருப்பது அம்பலமாகி இருக்கிறது.

மகாராஷ்டிராவில் உள்ள பயிற்சி மையம் ஒன்றில் பயின்ற 5 மாணவர்கள் மூலம் இந்த முறைகேடு நடந்திருக்கிறது. விண்ணப்பத்தவர்களிடம் இருந்து 50 லட்சம் முதல்  1 கோடி ரூபாய் வரை பணம் பெற்றிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

அதே நேரத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், முறைகேடுகள் இல்லாமல் தேர்வு நடத்த வேண்டும் என்றும் ராஜஸ்தான், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள் தேசிய தேர்வுகள் முகமைக்கு (NTA) கடிதம் எழுதி உள்ளனர்.

click me!