அறை எண் 207… ‘நாயகன்’ பட பாணி.. கோர்ட்டில் ஒரு பயங்கரம்….

Published : Sep 24, 2021, 06:26 PM IST
அறை எண் 207… ‘நாயகன்’ பட பாணி.. கோர்ட்டில் ஒரு பயங்கரம்….

சுருக்கம்

டெல்லியில் நீதிமன்றத்துக்குள் புகுந்த கும்பல் பிரபல தாதா உள்ளிட்ட 4 பேரை சுட்டு தள்ளிய சம்பவம் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அளித்துள்ளது.

டெல்லி: டெல்லியில் நீதிமன்றத்துக்குள் புகுந்த கும்பல் பிரபல தாதா உள்ளிட்ட 4 பேரை சுட்டு தள்ளிய சம்பவம் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அளித்துள்ளது.

உத்தரப்பிரதேசம், அரியானா என பல மாநிலங்களில் தாதாயிசம் பண்ணியவர் ஜிதேந்தர் கோகி. இவர் மீது ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த அவரையும், உடன் இருந்த சிலரையும் டெல்லி ரோகிணி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வந்தனர்.

நீதிமன்றத்தில் அறை எண் 207ல் அவர்கள் அழைத்து செல்லப்பட்டனர். அப்போது வழக்கறிஞர் உடையில் வந்த எதிர்தரப்பினர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு தள்ள ஆரம்பித்தனர்.

அவ்வளவுதான்… நீதிமன்றத்தில் என்ன நடக்கிறது என்பது தெரியாமல் தெறித்து ஓடினர். கிட்டத்தட்ட 40 நிமிடங்கள் கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. கடைசியில் ஜிதேந்தர் கோகி உள்பட 4 பேர் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டனர்.

பட்டப்பகலில் நீதிமன்ற வளாகத்தினுள் நடைபெற்ற இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். நாயகன் பட பாணியில் கோர்ட்டில் நடந்த துப்பாக்கிச்சூடு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

PREV
click me!

Recommended Stories

அட்வான்டேஜ் எடுக்கும் ஸ்பைஸ்ஜெட்.. தினமும் 100 கூடுதல் விமானங்கள்.. திணறும் இண்டிகோ!
இந்தியர்களுக்கு நிம்மதி.. இண்டிகோவுக்கு செக்! புதிய விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு கிரீன் சிக்னல்