திருநங்கையை மணந்த கணவர்... சமதித்த மனைவி... ஒரே வீட்டில் குடும்பம் நடத்தும் வினோதம்!!

By Narendran S  |  First Published Sep 13, 2022, 6:12 PM IST

மனைவியின் ஒப்புதலுடன் திருநங்கையை திருமணம் செய்து கொண்ட வாலிபர் ஒரே வீட்டில் வாழ முடிவு செய்துள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 


மனைவியின் ஒப்புதலுடன் திருநங்கையை திருமணம் செய்து கொண்ட வாலிபர் ஒரே வீட்டில் வாழ முடிவு செய்துள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தில் உள்ள கலஹந்தி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பஹிர். 32 வயதான இவருக்கு திருமணமாகி 2 வயது குழந்தைகள் உள்ளது. இந்த நிலையில் கடந்த ஆண்டு சங்கீதா என்ற திருநங்கை இவருக்கு அறிமுகமாகியுள்ளார். நாளடைவில் அவர்களுக்குள் காதல் ஏற்பட்டது. இதுக்குறித்து அவரது மனைவிக்கு தெரியவந்ததை அடுத்து அவர்களின் காதலுக்கு பஹரின் மனைவி சம்மதம் தெரிவித்தார்.

இதையும் படிங்க: காதல் மனைவி கள்ளக்காதலனுடன் உல்லாசம்.. தட்டிகேட்ட கணவரை கழற்றிவிட்டு எஸ்கேப்.. இறுதியில் நடந்த சோகம்..!

Tap to resize

Latest Videos

அதுமட்டுமின்றி அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளவும் சம்மதம் தெரிவித்தார். இதை அடுத்து இருவருக்கும் திருநங்கைகள் புடைசூழ கோயில் ஒன்றில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தை முன்னின்று நடத்தி வைத்த பஹரின் மனைவி காமினி, இருவரின் விருப்பத்தின் பேரில் மனைவியுடன் ஒப்புதலுடன் இத்திருமணம் நடந்துள்ளதால் இது அபூர்வமான திருமணமாகும்.

இதையும் படிங்க: டாக்டர் கணவன் மீது சலிப்பு.. பக்கத்து வீட்டு பையனுடன் காதல்.. அடிக்கடி உல்லாசம்.. இறுதியில் நடந்த பயங்கரம்.

இத்திருமணம் குறித்து மறுபரிசீலனை செய்து கொள்ளும்படி திருநங்கை சமுதாயத்தினர் கேட்டுக்கொண்டனர். இருவரும் தங்களது முடிவில் உறுதியாக இருந்ததால் திருமணம் செய்து வைத்துள்ளோம் என்று தெரிவித்தார். இதை அடுத்து மூவரும் ஒரே வீட்டில் ஒன்றாக குடும்பம் நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 

click me!