suvendu adhikari: bjp:சர்வாதிகாரி மம்தா!மே.வங்கத்தை வடகொரியாவாக மாற்றுகிறார்: சுவேந்து அதிகாரி கொந்தளிப்பு

By Pothy RajFirst Published Sep 13, 2022, 5:02 PM IST
Highlights

மேற்கு வங்கத்தில் சர்வாதிகாரத்தை அமல்படுத்த மம்தா பானர்ஜி முயல்கிறார். மேற்கு வங்கத்தை வடகொரியாபோல் மாற்ற முயல்கிறார் என பாஜக மூத்த தலைவரும், எதிர்க்கட்சித்தலைவருமான சுவேந்து அதிகாரி குற்றம்சாட்டினார்.

மேற்கு வங்கத்தில் சர்வாதிகாரத்தை அமல்படுத்த மம்தா பானர்ஜி முயல்கிறார். மேற்கு வங்கத்தை வடகொரியாபோல் மாற்ற முயல்கிறார் என பாஜக மூத்த தலைவரும், எதிர்க்கட்சித்தலைவருமான சுவேந்து அதிகாரி குற்றம்சாட்டினார்.

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக மம்தா பானர்ஜி இருந்து வருகிறார். திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் மலிந்துவிட்டதாகக் கூறி தலைமைச் செயலகம் நோக்கி செல்லும் பேரணிக்கு பாஜக அழைப்பு விடுத்திருந்தது.

கலவரமான கொல்கத்தா! பாஜக போராட்டம்! கண்ணீர் புகைக்குண்டு வீச்சு: சுவேந்து அதிகாரி கைது

இதையைடுத்து, மேற்கு வங்கத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஹவுராவிலிருந்தும் பாஜக தொண்டர்கள் கொல்கத்தாவில் குவியத் தொடங்கினார்கள்.

இதற்காக பாஜக சார்பில் தெற்கு வங்கம், வடக்கு வங்கம் சார்பில் தலா 3 ரயில்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டு தொண்டர்கள் அழைத்து வரப்பட்டனர். பேருந்துகளில் இருந்து அழைத்துவரப்பட்ட பாஜக தொண்டர்கள் அனைவரும் 24 பர்கானாவில் போலீஸார் தடுத்து நிறுத்தினர். 

பேரணி காரணமாக, கொல்கத்தாவில் பாஜக தொண்டர்கள் கூட்டம் குவியத் தொடங்கியது. இதையடுத்து ஹவுரா பாலத்தின் அருகே பாஜக தொண்டர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். 

இந்திய சிறையில் இருப்பவர்களில் முஸ்லிம்கள் எண்ணிக்கை 18 சதவீதமாகக் குறைந்தது: என்சிஆர்பி தகவல்

சந்திராகாச்சி பகுதியில் தலைமை ஏற்று எதிர்க்கட்சித் தலைவர் சுவந்து அதிகாரி தலைமையில் பாஜகவினர் போராட்டம் நடத்தினர். பாஜக துணைத் தலைவர் திலிப் கோஷ் வடக்கு கொல்க்ததாவில் பாஜகவினருடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

இவர்களை கலைந்து செல்லுமாறு போலீஸார் எச்சரித்தும் கலைந்து செல்லவில்லை இதையடுத்து, தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் கூட்டத்தினரை போலீஸார் கலைத்தனர்.

எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி நிருபர்களுக்கு அளித்தபேட்டியில் “ மேற்கு வங்கத்தில் திரிணமூல்காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி சர்வாதிகாரத்தை அமல்படுத்த முயல்கிறார். மேற்கு வங்கத்தை வடகொரியா போல் மாற்ற முயல்கிறார். கொல்கத்தாவில் நேற்றிலிருந்து போலீஸார் என்னவெல்லாம் செய்து வருகிறார்களோ அதற்கு விலை கொடுக்க நேரிடும். பாஜக மாநிலத்தில் வளர்ந்து வருகிறது.

பிரதமர் மோடி பிறந்தநாளன்று மிகப்பெரிய ரத்த தான முகாம் நடத்த மத்திய அரசு முடிவு

மேற்கு வங்க மக்களிடையே மம்தா பானர்ஜிக்கு ஆதரவு இல்லை. இதனால், மாநிலத்தில் ஜனநாயக ஆட்சிக்குப் பதிலாக சர்வாதிகாரத்தை, வடகொரியாவில் இருப்தைப் போன்ற ஆட்சியை நிறுவ மம்தா முயல்கிறார்” எனத் தெரிவித்தார்
 

click me!