bjp rally in kolkata: கொல்கத்தா பாஜக போராட்டம்! போலீஸ் வாகனம் தீ வைப்பு: கண்ணீர் புகைக்குண்டு வீச்சு(வீடியோ)

By Pothy RajFirst Published Sep 13, 2022, 3:59 PM IST
Highlights

மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியில் அதிகரித்துள்ள ஊழலை எதிர்த்து கொல்கத்தாவில் பாஜக சார்பில் தலைமைச் செயலகம் நோக்கி பேரணி நடத்தப்பட்டது.

மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியில் அதிகரித்துள்ள ஊழலை எதிர்த்து கொல்கத்தாவில் பாஜக சார்பில் தலைமைச் செயலகம் நோக்கி பேரணி நடத்தப்பட்டது.

இந்த பேரணி செல்ல முயன்ற பாஜக மூத்த தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சுவேந்து அதிகாரி கைது செய்யப்பட்டார். 

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக மம்தா பானர்ஜி இருந்து வருகிறார். திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் மலிந்துவிட்டதாகக் கூறி தலைமைச் செயலகம் நோக்கி செல்லும் பேரணிக்கு பாஜக அழைப்பு விடுத்திருந்தது.

இதையைடுத்து, மேற்கு வங்கத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஹவுராவிலிருந்தும் பாஜக தொண்டர்கள் கொல்கத்தாவில் குவியத் தொடங்கினார்கள்.

பிட்புல் நாய்களை கைவிடும் உரிமையாளர்கள்: அதிகரிக்கும் நாய்கள் தொல்லை: கொல்லத் துடிக்கும் கேரளா

இதற்காக பாஜக சார்பில் தெற்கு வங்கம், வடக்கு வங்கம் சார்பில் தலா 3 ரயில்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டு தொண்டர்கள் அழைத்து வரப்பட்டனர். பேருந்துகளில் இருந்து அழைத்துவரப்பட்ட பாஜக தொண்டர்கள் அனைவரும் 24 பர்கானாவில் போலீஸார் தடுத்து நிறுத்தினர். 

கொல்கத்தாவில் பாஜகவினர் நடத்தும்  போராட்டத்தால் கடும் போக்குவரத்து நெரிசல் இன்று ஏற்பட்டது. வாகன ஓட்டிகள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குச்செல்ல மணிக்கணக்கில் காத்திருந்து போக்குவரத்து நெரிசலுக்கு இடையே சென்றனர். 

பேரணி காரணமாக, கொல்கத்தாவில் பாஜக தொண்டர்கள் கூட்டம் குவியத் தொடங்கியது. இதையடுத்து ஹவுரா பாலத்தின் அருகே பாஜக தொண்டர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். 

சந்திராகாச்சி பகுதியில் தலைமை ஏற்று எதிர்க்கட்சித் தலைவர் சுவந்து அதிகாரி தலைமையில் பாஜகவினர் போராட்டம் நடத்தினர். பாஜக துணைத் தலைவர் திலிப் கோஷ் வடக்கு கொல்க்ததாவில் பாஜகவினருடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இவர்களை கலைந்து செல்லுமாறு போலீஸார் எச்சரித்தும் கலைந்து செல்லவில்லை இதையடுத்து, தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் கூட்டத்தினரை போலீஸார் கலைத்தனர்.

அட்டர்னி ஜெனரலாக மூத்த வழக்கறிஞர் முகல் ரோத்தகி நியமனம்?

பாஜக எம்.பி. லாக்கெட் சாட்டர்ஜி, ராகுல் சின்ஹா ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரியையும் போலீஸார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

பாஜக தேசிய துணைத் தலைவர் திலிப் கோஷ் கூறுகையில் “ மக்களின் எழுச்சியைப் பார்த்து திரிணமூல் அரசு பயப்படுகிறது. எங்களின் போராட்டத்தை தடுத்து நிறுத்த முயன்றால், நாங்கள் அஹிம்சை முறையில் எதிர்ப்போம். எந்த விளைவுகளுக்கும் மேற்கு வங்க அரசுதான் பொறுப்பு” எனத் தெரிவித்தார்

தினசரி ரூ.50 முதலீடு! கிடைப்பதோ ரூ.35 லட்சம்: அஞ்சலகத்தின் இந்த சேமிப்பு திட்டத்தை மறக்காதிங்க

பாஜக தலைவர் ராகுல் சின்ஹா கூறுகையில் “ அமைதியான முறையில் பாஜகவினர் எதிர்ப்புத் தெரிவித்து ஜனநாயக முறையில் போராட்டம் நடத்தினர். அதை மம்தா அரசு வலுக்கட்டாயமாக நிறுத்துகிறது”எனத் தெரிவித்தார்
 

click me!