ncrb:இந்திய சிறையில் இருப்பவர்களில் முஸ்லிம்கள் எண்ணிக்கை 18 சதவீதமாகக் குறைந்தது: என்சிஆர்பி தகவல்

By Pothy RajFirst Published Sep 13, 2022, 2:43 PM IST
Highlights

இந்திய சிறையில் இருப்பவர்களில் முஸ்லிம்கள் எண்ணிக்கை 18 சதவீதமாகக் குறைந்தது: என்சிஆர்பி தகவல்

2021ம்ஆண்டின் கணக்கின்படி, இந்திய சிறைகளில் இருப்பவர்களில் தண்டனைக் கைதிகள், விசாரணைக் கைதிகள் உள்ளிட்டோர் 18.7 சதவீதம்  பேர் முஸ்லிம்கள் என்று தேசிய குற்ற ஆவணக் காப்பகம்(என்சிஆர்பி) தெரிவித்துள்ளது.

2020ம் ஆண்டில் இந்திய சிறைகளில் இருந்த கைதிகளில் முஸ்லிக்கள் எண்ணிக்கை 20.2%ஆக இருந்தது. ஆனால், 2021ம் ஆண்டில் குறைந்து 18.7% ஆக குறைந்துள்ளது.

ஆனால் இந்துக்கள் எண்ணிக்கை சிறையில் அதிகரித்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டில் 72.8% மாக இருந்த இந்துக்கள் எண்ணிக்கை 2021ம் ஆண்டில் 73.6% ஆக அதிகரித்துள்ளது.

அட்டர்னி ஜெனரலாக மூத்த வழக்கறிஞர் முகல் ரோத்தகி நியமனம்?

2020ஆண்டில் இந்திய சிறைகளில் சீக்கியர்கள் எண்ணிக்கை 3.4% ஆக இருந்தநிலையில், 2021, டிசம்பர் 31ம்தேதிபடி, 4.2% ஆக அதிகரித்துள்ளது. சிறையில் உள்ள கிறிஸ்தவர்கள் எண்ணிக்கை2.6 சதவீதத்திலிருந்து 2.5சதவீதமாகக் குறைந்துள்ளது.

2020ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி நிலவரப்படி இந்திய சிறைகளில் சீக்கியர்கள் எண்ணிக்கை15,807 ஆக இருந்நிலையில் 2021, டிசம்பர் 31ம் தேதிபடி 22,100 ஆக அதிகரித்துள்ளது.

2011ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் இந்துக்கள் எண்ணிக்கை 79.8%, முஸ்லிம்கள் எண்ணிக்கை 14.2 சதவீதம், கிறிஸ்தவர்கள் எண்ணிக்கை2.3%, சீக்கியர்கள் எண்ணிக்கை1.72 சதவீதமாகும்.

2016ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டுகளுக்கு இடையே இந்திய சிறைகளில் கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2016ம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக இந்தியச் சிறைகளில் 4.33 லட்சம் கைதிகள் இருந்தனர், இது 2021ம் ஆண்டில்5.54 லட்சம் கைதிகளாக அதிகரித்தது.

பிட்புல் நாய்களை கைவிடும் உரிமையாளர்கள்: அதிகரிக்கும் நாய்கள் தொல்லை: கொல்லத் துடிக்கும் கேரளா

ஆனால்,விசாரணைக் கைதிகள் எண்ணிக்கை45.8சதவீதம் அதிகரித்துள்ளது, தடுப்புகாவலில் வைக்கப்படுவோர் எண்ணிக்கை12.3% உயர்ந்துள்ளது. குற்றவழக்குகளில் தண்டனை பெற்ற கைதிகளின் எண்ணிக்கை 9.5% சதவீதம் குறைந்துள்ளது.

2021, டிசம்பர் 31ம்தேதிப்படி, இந்தியச் சிறைகளில் ஒட்டுமொத்தமாக 5.54 லட்சம் கைதிகள் உள்ளனர், இதில் 4.77 லட்சம் கைதிகள் மீது விசாரணை நிலுவையில் இருக்கிறது,1.22 லட்சம் கைதிகள் குற்றம்நிரூபிக்கப்பட்டத ண்டனைக் கைதிகள், 547 பேர் தடுப்புக்காவலில்உள்ளனர்.

 5.54 லட்சம் கைதிகளில், 3.84 லட்சம் கைதிகள் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள், 97,650 பேர் முஸ்லிம் கைதிகள், 22,100 பேர் சீக்கியர்கள், 13,118 பேர் கிறிஸ்தவர்கள். 

சிறையில் உள்ள முஸ்லிம் கைதிகள் எண்ணிக்கை 2020ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 2021ம் ஆண்டில் குறைந்துள்ளது. 2020ம் ஆண்டில்17.4சதவீதமாக இருந்தது, 2021ம் ஆண்டில்15.9சதவீதமாகக் குறைந்தது. விசாரணைக் கைதிகளில் 19.5 சதவீதமாக இருந்த முஸ்லிம்கைதிகள் எண்ணிக்கை 2021ம் ஆண்டில் 18 சதவீதமாகக் குறைந்தது. தடுப்புக்காவலில் இருப்போர் எண்ணிக்கையும் 30.7% சதவீதத்திலிருந்து 27.7சதவீதமாகக் குறைந்தது.

ஆர்.எஸ்.எஸ் ட்ரவுசரில் தீ.. காங்கிரஸ் வெளியிட்ட சர்ச்சை படம் - ரவுண்ட் கட்டிய பாஜக தலைவர்கள்

குற்றம் நிரூபிக்கப்பட்ட முஸ்லிம்கள் கைதிகளில் அதிகபட்சமாக அசாம் மாநிலத்தில் உள்ளனர். அசாம் மாநிலத்தில் உள்ள குற்றம்நிரூபிக்கப்பட்ட கைதிகளில் 60.50 சதவீதம் பேர் முஸ்லிம்கள்.

மகாராஷ்டிராவில் 25.50% , தெலங்கானாவில் 21.7%, உத்தரப்பிரதேசத்தில் 20.72% பேர் உள்ளனர்.
ஜம்முகாஷ்மீரில் 2021ம் ஆண்டு டிசம்பர் 31ம்தேதி கணக்கின்படி, விசாரணைக் கைதிகளில் 68சதவீதத்துக்கும் அதிகமானோர் முஸ்லிம்கள், அடுத்ததாக அசாம் மாநிலத்தில் விசாரணைக் கைதிகளில் 49% பேர் முஸ்லிம்கள், மேற்கு வங்கத்தில் 42.3% பேர், கேரளாவில் 31.3% , உத்தரகாண்டில் 29.6%, டெல்லியில் 25.98% பேர் முஸ்லிம்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு என்சிஆர்பி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

click me!