pitbull dog: பிட்புல் நாய்களை கைவிடும் உரிமையாளர்கள்: அதிகரிக்கும் நாய்கள் தொல்லை: கொல்லத் துடிக்கும் கேரளா

By Pothy Raj  |  First Published Sep 13, 2022, 12:07 PM IST

லக்னோவில் வளர்த்தவரையே பிட்புல் நாய் கடித்துக் குதறிய சம்பவத்தைத் தொடர்ந்து, பிட்புல் நாய் வளர்ப்பதை வீட்டு உரிமையாளர்கள் கைவிட்டு வருகிறார்கள். 
 


லக்னோவில் வளர்த்தவரையே பிட்புல் நாய் கடித்துக் குதறிய சம்பவத்தைத் தொடர்ந்து, பிட்புல் நாய் வளர்ப்பதை வீட்டு உரிமையாளர்கள் கைவிட்டு வருகிறார்கள். 

பிட்புல் நாய் அமெரிக்க வகையைச் சேர்ந்தது. இரு வெவ்வேறு வகையான நாய்களைக் கொண்டு கலப்பினத்தால் பிட்புல் உருவாக்கப்பட்டதாகும். பிட்புல் நாய்கள் மிகுந்த ஆக்ரோஷமும், கோபமும் கொண்டவை என்பதால், சாதாரணமாக வீட்டில் வளர்க்கும் பிறநாட்டு நாய்களைப் போல், இதை வளர்க்க முடியாது. இதை வளர்க்க தனியாக பயிற்சியும், ஆலோசனையும் பெறவேண்டும்.

Tap to resize

Latest Videos

ஆனால் சாதாரண நாய்களைப் போல் பிட்புல் நாய்களையும் நினைத்து வளர்த்தவர்கள் நிலைமை சமீபத்தில் சோகத்தில் முடிந்தது. டெல்லியிலும், லக்னோவிலும் வளர்த்தவர்களையும் தெருவில் சென்றவர்களையும் கடித்துக் குதறியது.

தொடரும் நாய்கள் தொல்லை! சிறுவனை கடித்து குதறிய தெருநாய்!

கடந்த 3ம் தேதி, காஜியாபாத் நகரில் பூங்காவில் நடைபயிற்சி சென்றிருந்த உரிமையாளரிடம் இருந்து தப்பித்த பிட்புல்நாய், தெருவில் சென்ற 10வயது சிறுவனை கடித்துக் குதறியது.

கடந்த வாரம் காஜியாபாத் லோனி பகுதியில் 6வயது சிறுவனை பிட்புல் நாய் கடித்தது. குர்கோன் நகரில் இரு பெண்களையும் கடித்துக் குதறிய சம்பவம் நடந்தது. குறிப்பாக லக்னோவில் 82வயது உரிமையாளர்களை திடீரென ஆவேசமாக பிட்புல் நாய் தாக்கி, அவரை தாக்கியது. இதில் நாய் உரிமையாளர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இன்னும் இருந்து வருகிறார்

பிட்புல் நாய்கள் தாக்குதல் குறித்து ஆய்வாளர் ஆரோன் டி சில்வா கூறுகையில் “ பிட்புல் நாய்கள் திடீரென உரிமையாளர்கள் மட்டுமல்லாமல் யாரை வேண்டுமானாலும் தாக்குவதற்கு முக்கியக் காரணம், அதன் இயல்பான ஆக்ரோஷமான குணம்தான். பிட்புல் நாய் புல்டாக் மற்றும் புல்லி இனத்தின் கலவையாக உருவாக்கப்பட்டது.  இந்த நோயின் நோக்கமே காட்டெருமைகளையும், கரடிகளையும் காட்டில் வேட்டையாடுவதற்காக உருவாக்கப்பட்டது.

எலெக்ட்ரிக் பைக் ஷோரூமில் பயங்கர தீ விபத்து.. சென்னையை சேர்ந்தவர் உட்பட 8 பேர் உடல் கருகி பலி..!

பிட்புல் நாய்கள் இயல்பாகவே அதிகமான சக்தியும், தாக்குதல் திறனும் கொண்டவை. சாதாரண நாய்களை வளர்க்கும் முறையில் வளர்க்ககூடாது. இதனுடன் பழகும்போது உரிமையாளர்களும் கவனத்துடன் பழக வேண்டும். நல்ல பயிற்சி இல்லாமல் இந்த நாய்களை வளர்ப்பது ஆபத்தானதாகும்” என்று தெரிவித்தார்.
பிட்புல் நாய்கள் மூலம் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அந்த நாய்களை வளர்ப்பதை மக்கள் தவிர்த்து வருகிறார்கள். வளர்த்து வருபவர்களும், அந்த நாய்களை காப்பகத்தில் ஒப்படைக்க முடிவுசெய்துள்ளனர்.

நொய்டாவில் தெருநாய்களுக்கான காப்பகம், தொண்டுநிறுவனம் நடத்தி வருபவர் சஞ்சய் மொகபத்ரா. பிட்புல் தாக்குதல்கள் அதிகரித்த நிலையில் 200க்கும் மேற்பட்டோர் அழைத்து தங்கள் நாய்களை ஒப்படைக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்து மொகபத்ரா கூறுகையில் “ நாடுமுழுவதும் இதுவரை 200க்கும் மேற்பட்டோர் பிட்புல் நாய்களை வளர்த்து வருவோர் என்னை தொலைப்பேசியில் அழைத்துள்ளனர். நாய்களை வளர்பதில் சிரமம் இருப்பதாகக் கூறி அதனை ஒப்படைக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.

 லக்னோ சம்பவத்தைத் தொடர்ந்து அமெரிக்கன் பிட்புல் நாய்கள் மீது உரிமையாளருக்கே அச்சம் ஏற்பட்டுள்ளது. தங்கள் வீடுகளில் வளர்க்கவும், நாய்களுடன் சகஜமாகப் பழகவும் அச்சப்படுகிறார்கள். இந்த நாய்களை சாலையில் விடுவதும் ஆபத்தானது. 

பிரதமர் மோடி பிறந்தநாளன்று மிகப்பெரிய ரத்த தான முகாம் நடத்த மத்திய அரசு முடிவு

இந்த நாய்களை முறைப்படி பயிற்சிக்குள் கொண்டுவர வேண்டும். அழகுக்காக இந்த பிட்புல்நாய்களை வளர்க்க முடியாது. இந்த நாய்களுக்கு முறைப்படி பயிற்சி அளிக்க முயன்றுவருகிறோம். ஆதலால், உரிமையாளர்கள் நாய்களை திறந்த வெளியில் விடவேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளோம்” எனத் தெரிவித்தார்

இதற்கிடையே கேரளாவில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருவதால், அதனைக் கொல்வதற்கு உச்ச நீதிமன்றத்தில் அனுமதிகோரியுள்ளது. கேரளாவில் மட்டும் அரசின் கணக்கின்படி 3 லட்சம் தெருநாய்கள் உள்ளன. இவற்றை கொல்ல அரசு தயாராகி வருகிறது. ஆனால், விலங்குகள் ஆர்வலர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். 

என்சிஇஆர்டி அமைப்புக்கு நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து: யுஜிசி முடிவு

ஆனால், உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் கூறிய கருத்தில் “ தெருநாய்களுக்கு உணவு வழங்குவோர்தான் அந்த நாய்கள் யாரையேனும் கடித்தாலும் பொறுப்பேற்க வேண்டும். தெருநாய்களுக்கு முறைப்படி தடுப்பூசி செலுத்த அவர்கள் உதவவேண்டும்” எனத் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.


 

click me!