ncert:என்சிஇஆர்டி அமைப்புக்கு நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து: யுஜிசி முடிவு

By Pothy Raj  |  First Published Sep 13, 2022, 11:11 AM IST

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில்(NCERT) அமைப்புக்கு நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து வழங்க பல்கலைக்கழக மானியக் குழு முடிவு செய்துள்ளது.


தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில்(NCERT) அமைப்புக்கு நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து வழங்க பல்கலைக்கழக மானியக் குழு முடிவு செய்துள்ளது.

மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில் நேற்று நடந்த உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. என்சிஇஆர்டி அமைப்பு “ டி நோவோ” பிரிவில் நிகர்நிலைப் பல்கலைக அந்தஸ்து வழங்கப்படுகிறது.

Tap to resize

Latest Videos

ஆகஸ்ட் சில்லறைப் பணவீக்கம் 7சதவீதமாக உயர்வு: வட்டி வீதத்தை உயர்த்த ஆர்பிஐக்கு நெருக்கடி

இந்த டி நோவோ பிரிவில் நாட்டில் தற்போது 7 பல்கலைக்கழங்கள் உள்ளன. அதில் சென்ட்ரல் இன்ஸ்டியூட்ஆப் புத்திஸ்ட் ஸ்டடீஸ், சென்ட்ரல் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி, சின்மயா விஸ்வாவித்யபீடம், நேஷனல் இன்ஸ்டியூட் ஆப் ஆயுர்வேதா, இந்தியன் அசோசியேஷன் பார் தி கல்டிவேஷன் சயின்ஸ், நேஷனல் ரயில் அன்ட் ட்ரான்ஸ்போர்டேஷன் இன்ஸ்ட்டியூட், கலிங்கா இன்ஸ்ட்டியூட் ஆப் சோசியல் சயின்ஸ் ஆகியவை உள்ளன.

டி-நோவோ பிரிவில் நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்துக்காக யுஜிசியிடம் அனுமதிபெற்றபின், ஆராய்ச்சிப் படிப்புகள், புதிய ஆராய்ச்சிகள், வளர்ந்துவரும் துறைகள் குறித்த ஆராய்ச்சிகள், ஆய்வுகள், ஏற்கெனவே இருக்கும் படிப்புகள் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள முடியும்.

பிரதமர் மோடி பிறந்தநாளன்று மிகப்பெரிய ரத்த தான முகாம் நடத்த மத்திய அரசு முடிவு

பள்ளிக் கல்விக்கான உயர்மட்ட அமைப்பான என்சிஇஆர்டி, ஏற்கெனவே கல்விதொடர்பான பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக கல்வி ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கம், மாணவர்களின் திறன்மேம்பாடு வளர்த்தல், பாடங்களின் தரத்தை மேம்படுத்துதல், கற்றல், கற்பித்தலில் புத்தாக்கத்தை கொண்டுவருதல் போன்றவற்றை செய்து வருகிறது

என்சிஇஆர்டி அமைப்புக்கு நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து கிடைத்துவிட்டால், என்சிஇஆர்டி பிறமாநிலப் பல்கலைக்கழகங்களுடனும், மத்தியப் பல்கலைக்கழகங்களுடனும் இணைந்து முதுநிலைப் பட்டப்படிப்புகளை வழங்கலாம்.

உலகின் தலைசிறந்த நிறுவனங்களை இந்தியர்கள் தான் இயக்குகிறார்கள்… நிர்மலா சீதாராமன் பெருமிதம்!!

தற்போது என்சிஇஆர்டி மூலம் வழங்கப்படும் இளநிலை மற்றும் முதுநிலைப்ப டிப்புகள், உள்ளூர் பல்கலைக்கழங்களுடன் இணைந்து நடத்தப்படுகின்றன. குறிப்பாக போபாலில் உள்ள பரகத்துல்லா பல்கலைக்கழகம், அஜ்மீரில் உள்ள எம்டிஎஸ் பல்கலைக்கழகம், மைசூரு பல்கலைக்கழகம், உட்கல் பல்கலைக்கழகம், புவனேஷ்வர் பல்கலைக்கழகம், ஷில்லாங்கில் உள்ள வடகிழக்கு மலை பல்கலைக்கழகம்ஆ கியவற்றில் நடத்தப்படுகிறது

நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கப்பட்டால் அனைத்து பல்கலைக்கழகங்களுடன் இணைந்து என்சிஇஆர்டி தனது படிப்புகளை வழங்க முடியும். கடந்த 1961ம் ஆண்டு சொசைட்டி சட்டத்தின் கீழ் என்சிஇஆர்டி அமைப்பு உருவாக்கப்பட்டது. மத்திய அரசுக்கு கல்விரீதியான ஆலோசனைகள் வழங்கவும், உதவவும் அமைக்கப்பட்டது. 


 

click me!