Mukul Rohatgi: Attorney-General of india: அட்டர்னி ஜெனரலாக மூத்த வழக்கறிஞர் முகல் ரோத்தகி நியமனம்?

By Pothy RajFirst Published Sep 13, 2022, 12:40 PM IST
Highlights

நாட்டின் புதிய அட்டர்னி ஜெனலர் அல்லது தலைமை வழக்கறிஞராக மீண்டும் முகல் ரோத்தகி நியமிக்கப்படுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன

நாட்டின் புதிய அட்டர்னி ஜெனலர் அல்லது தலைமை வழக்கறிஞராக மீண்டும் முகல் ரோத்தகி நியமிக்கப்படுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன

நாட்டின் அட்டர்னி ஜெனரலாக ஏற்கெனவே கடந்த 2014ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டுவரை முகல் ரோத்தகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது மீண்டும் நியமிக்கப்பட்டால் 2வது வாய்ப்பாகும்.

பிட்புல் நாய்களை கைவிடும் உரிமையாளர்கள்: அதிகரிக்கும் நாய்கள் தொல்லை: கொல்லத் துடிக்கும் கேரளா

தற்போது அட்டர்னி ஜெனரலாக இருக்கும் கே.கே.வேணுகோபால் செப்டம்பர் 30ம் தேதிக்குப்பின் தன்னால் தலைமை வழக்கறிஞராக தொடர முடியாது. பல்வேறு உடல் உபாதைகள் இருப்பதால் அதிலிருந்து விடுபட விரும்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன

கே.கே.வேணுகோபாலின் பதவிக்காலம் வரும் 30ம் தேதியுடன் முடிகிறது. சமீபத்தில் நடந்த உச்ச நீதிமன்ற கொலிஜியம் கூட்டத்தில் தனக்கு பதவிநீட்டிப்பு வேண்டாம் என வேணுகோபால் கேட்டுக்கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் மோடி பிறந்தநாளன்று மிகப்பெரிய ரத்த தான முகாம் நடத்த மத்திய அரசு முடிவு

தற்போது கே.கே.வேணுகோபாலுக்கு 91வயதாகிறது. கடந்த 2017ம் ஆண்டு நியமிக்கப்பட்ட வேணுகோபாலுக்கு 3 ஆண்டுகள் பதவிக்காலம் 2020ம் ஆண்டு முடிந்தது. அதன்பின் 2 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்கியது மத்திய அரசு. 

கடந்த ஜூன் மாதம் வேணுகோபால் பதவிக்காலம் முடிந்தநிலையில் மேலும் 3 மாதங்களை மத்திய அ ரசு நீட்டித்தது. ஆனால், தனக்கு பதவி நீட்டிப்பு வேண்டாம் என்று தொடர்ந்து மத்திய அரசிடம் வேணுகோபால் கோரிவந்தார். 

இந்நிலையில் அடுத்த அட்டர்னி ஜெனரலாக 67வயதான முகல் ரோத்தகிதான் நியமிக்கப்படுவார் எனத் தெரிகிறது. ஏற்கெனவே தலைமை வழக்கறிஞராக இருந்த அனுபவம் ரோத்தகிக்கு உண்டு. உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞராகஇருக்கும் ரோத்தகரி, கூடுதல் சொலிசிட்டராகவும் இருந்துள்ளார்.
 

click me!