பப்புவா நியூ கினியாவை தன்வசப்படுத்திய சீனா; அலறும் அமெரிக்கா; பிரதமர் மோடியின் முதல் பயணம்!!

By Dhanalakshmi G  |  First Published May 20, 2023, 12:36 PM IST

பிரதமர் மோடி தனது அரசு முறை பயணத்தில் பப்புவா நியூ கினியா நாட்டுக்கும் செல்கிறார். முதல் முறையாக இரு இந்தியப் பிரதமராக அந்த நாட்டுக்கு மோடி செல்ல இருக்கிறார். 


பிரதமர் மோடி ஜப்பான், ஆஸ்திரேலியா, பப்புவா நியூ கினியா ஆகிய நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டு இருக்கிறார். நேற்று ஜப்பான் சென்றடைந்த பிரதமர் மோடி அந்த நாட்டின் பிரதமர் புமியோ கிஷிடாவை சந்தித்து பேசினார். 

பிரதமர் மோடி இன்று ஜப்பானில் காந்தி சிலையை திறந்து வைத்தார். இதையடுத்து, அங்கு நடக்கும் 49வது ஜி 7 மாநாட்டில் கலந்து கொள்கிறார். ஜி 7-ல் உறுப்பு நாடுகளாக கனடா, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான், இத்தாலி, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் உள்ளன. விருந்தினர் நாடாக இந்தியாவுக்கு அழைப்பு விடப்பட்டு இருந்தது. இன்றும் நாளையும் ஜி 7 மாநாட்டின் அமர்வுகள் துவங்குகின்றன. பருவநிலை மாற்றம் முதல் சுற்றுச்சூழல் வரை அனைத்து தலைப்புகளிலும் கலந்துரையாடல் நடக்கும் என்று தெரிய வந்துள்ளது. இன்று நடக்கும் மாநாட்டில் பிரதமர் மோடி பேசுவார் என்று கூறப்படுகிறது. 

Tap to resize

Latest Videos

இன்றும் நாளையும் ஜப்பானில் நடக்கும் ஜி 7 மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர் 22ஆம் தேதி பப்புவா நியூ கினியா நாட்டுக்கு மோடி செல்கிறார். பப்புவா நியூ கினியாவும், சீனாவும் இணைந்து செல்வது இந்திய பசிபிக் மண்டலத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. பப்புவா நியூ கினியாவின் போர்ட் மோர்ஸ்பியில் நடக்கும் மூன்றாவது இந்திய பசிபிக் தீபகற்ப ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்கிறார். இந்த மாநாட்டில் பப்புவா நியூ கினியா பிரதமர் ஜேம்ஸ் மராபேவும் கலந்து கொள்கிறார்.

அணு ஆயுதம் வேண்டாம்.. இந்தியா - சீனா பிரச்சனைக்கு காரணம் என்ன? பிரதமர் மோடி ஓபன் டாக் !!

பப்புவா நியூ கினியா கவர்னர் ஜெனரல் சர் பாப் தாடேவுடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவார் என்று தெரிய வந்துள்ளது. 2014-ல் தொடங்கப்பட்டது, இந்திய பசிபிக் தீபகற்ப ஒத்துழைப்பு அமைப்பு. இந்தியா மற்றும் 14 பசிபிக் தீவு நாடுகளை உள்ளடக்கியது இந்த அமைப்பு. இந்தியா, பப்புவா நியூ கினியா இரண்டும் கடந்த பல ஆண்டுகளாக தங்களுக்குள் பரஸ்பர வலுவான ஒத்துழைப்பை மேற்கொள்ள தவறிவிட்டன. இந்த மாநாட்டில் மொத்தம் 14 தீபகற்ப நாடுகள் பங்கேற்கின்றன. இந்த பிராந்தியாத்தில் சீனாவை எதிர்கொள்ள பப்புவா நியூ கினியாவுடன் ஒத்துழைப்பு மேற்கொள்வது இந்தியாவுக்கு அவசியமாகியுள்ளது.

தெற்கு பசிபிக் ஆசிய நாடுகளுடன் ஒத்துழைப்பை மேற்கொள்ளும் அதே நேரத்தில் பப்புவா நியூ கினியாவுடன் இந்தியா வலுவான, யுக்தி ரீதியில், பொருளாதார ரீதியில் ஒத்துழைப்பை மேற்கொள்ள முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. 

தெற்கு பசிபிக்கில் இருக்கும் நாடுகளில் பப்புவா நியூ கினியா பொருளாதார ரீதியில் முக்கியத்துவம் பெற்ற நாடு. இங்கு தங்கம் மற்றும் தாமிரம் குவிந்து கிடக்கிறது. இந்த வளங்களை குறிவைத்துதான் பப்புவா நியூ கினியாவுடன் சீனா நெருக்கத்தை மேற்கொண்டு வருகிறது. 

இலங்கைக்கு சென்றால் உங்கள் எடை குறைவாக இருக்கலாம்.. ஆனால் மற்ற பகுதிகளில் ஏன் இல்லை.. நாசா விளக்கம்

இந்த  நிலையில்தான், ஜப்பான், பப்புவா நியூ கினியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு தனது பயணத்தைத் தொடங்குவதற்கு முன்,''காலநிலை மாற்றம் மற்றும் நிலையான வளர்ச்சி, திறன் மேம்பாடு போன்ற எங்களை ஒன்றிணைக்கும் பிரச்சினைகளில் பசிபிக் தீவு நாடுகளின்  தலைவர்களுடன் கலந்து ஆலோசிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்'' என்று மோடி தெரிவித்து இருந்தார். 

கடந்தாண்டு சீன அதிபர் ஜி ஜின்பிங்கை பப்புவா நியூ கினியா பிரதமர் மராபே பாங்காங்கில் சந்தித்து பேசி இருந்தார். இதையடுத்து அறிக்கை வெளியிட்டு இருந்த சீனா, இரு நாடுகளும் நட்பு நாடுகள், சிறந்த வர்த்தக கூட்டாளிகள், சிறந்த சகோதரத்துவ நாடுகள்'' என்று குறிப்பிட்டு இருந்தது. 

இதுதவிர இருநாடுகளும் இணைந்து வெளியிட்டு இருந்த கூட்டறிக்கையில், ''உயர்தரமான பெல்ட் மற்றும் ரோடு ஒத்துழைப்பைத் தொடரவும், விவசாயம், வனத்துறை, மீன்வளம், உள்கட்டமைப்பு, சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், பேரிடர் தயார்நிலை, பசுமை மேம்பாடு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் பப்புவா நியூ கினியாவுடன் இணைந்து பணியாற்ற சீனா தயாராக இருப்பதாக சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்'' என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. தொடர்ச்சியாக, பீஜிங்கிற்கு வருமாறு மராபேவுக்கு சீனா கடந்த மாதம் அழைப்பு விடுத்து இருந்தது.  

பப்புவா நியூ கினியாவுக்கு செல்ல இருந்த தனது திட்டத்தை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரத்து செய்து இருக்கிறார். இந்த நிலையில்தான் பிரதமர் மோடி செல்கிறார். பாதுகாப்பு மற்றும் ராணுவ ஒத்துழைப்பில் அமெரிக்காவுடன் இந்தியா இணைந்து பணியாற்றி வருகிறது. பப்புவா நியூ கினியாவுடன் ராணுவ ஒத்துழைப்பை மேற்கொள்ளவும் அமெரிக்கா முயற்சித்து வருகிறது. இந்த நிலையில் மோடி செல்வது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 

2017, ஜூன் மாதம் போர்ட் மோர்ஸ்பிக்கு ஐஎன்எஸ் ஷ்யாத்ரி சென்று இருந்தது. இதற்கு முன்னதாக இந்திய கடற்படையைச் சேர்ந்த தாபர் கப்பல் சென்று இருந்தது. 2016ஆம் ஆண்டில் இந்திய ஜனாதிபதியாக இருந்த பிரணாப் முகர்ஜி அரசு முறை பயணமாக ஏப்ரல் மாதம் சென்று இருந்தார்.

சீனா முன்பு தெற்கு சீனக் கடல் பகுதியை ஆக்கிரமித்து அண்டை நாடுகளுக்கு மிரட்டல் விடுத்து வந்தது. வியட்நாம் இந்தப் பகுதியை உரிமை கோரி வரும் நிலையில் சீனா தெற்கு சீன கடல் பகுதியை ஆக்கிரமித்து ராணுவ தளவாடங்களை அமைத்து வருகிறது. ரோந்து கப்பலை அடிக்கடி அனுப்பி அமெரிக்காவை உசுப்பி வருகிறது. அமெரிக்காவும் பதிலுக்கு ரோந்து கப்பலை தெற்கு சீன கடல் பகுதிக்கு அனுப்புகிறது. இந்த நிலையில்தான் தற்போது, தெற்கு பசிபிக் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

குவாட் அமைப்பில் இருக்கும் இந்தியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகள் விழித்துக் கொண்டுள்ளன. சீனாவுக்கு எச்சரிக்கை விடும் விதமாக ஆகஸ்ட் 11-ல் இருந்து ஆகஸ்ட் 20 வரை மலபார் கடற்படை பயிற்சியில், குவாட் நாடுகள் சிட்னி கடற்கரையில் ஈடுபட இருக்கின்றன. எனவே, பாதுகாப்பு குறித்தும் பப்புவா நியூ கினியாவுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துவார் என்று கூறப்படுகிறது. பசிபிக் பகுதியில்  சிங்கிளாக அதிகாரம் செலுத்த முயற்சித்த சீனாவுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்று குவாட் நாடுகள் தீர்மானித்துள்ளன. பப்புவா நியூ கினியா நாட்டை அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் கண்டுகொள்ளாமல் இருந்ததை தனக்கு சாதகமாக சீனா பயன்படுத்தி வந்தது. ராணுவ தளத்தை சீனா அமைத்து வருவதை அடுத்து அமெரிக்காவும், ஆஸ்திரேலியாவும் விழித்துக் கொண்டுள்ளன.

இதையடுத்து தான் கடந்த மார்ச் மாதம் பப்புவா நியூ கினியாவுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை அமெரிக்க மேற்கொண்டது. 30 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது சாலமன் தீபகற்பத்தில் அமெரிக்கா தனது தூதரகத்தை திறந்துள்ளது. 

இது மட்டுமின்றி ஆஸ்திரேலியாவுக்கு சீனா பயங்கர அச்சுறுத்தலாக மாறி இருக்கிறது. வடக்கு ஆஸ்திரேலியாவைச் சுற்றிலும் தெற்கு பசிபிக் பகுதியில் ராணுவ தளங்களை உருவாக்க சீனா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் குவாட் அமைப்பில் இருக்கும் உறுப்பு நாட்டின் பிரதமரான மோடி பப்புவா நியூ கினியா செல்கிறார். 

click me!