Republic Day 2023: இந்திய குடியரசு தினம் உருவானது எப்படி? எதற்காகக் கொண்டாடப்படுகிறது?

By SG BalanFirst Published Jan 25, 2023, 7:29 PM IST
Highlights

இந்திய குடியரசு தினம் கொண்டாடுவதற்கான நாள் எப்படித் தேர்வு செய்யப்பட்டது?, எதற்காக குடியரசு நாள் கொண்டாடப்படுகிறது என்பதைச் சுருக்கமாக விளக்குகிறது இத்தொகுப்பு.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஆட்சி செய்யும் அரசு அமைப்பு குடியருசு என்று அழைக்கப்படும். குடியரசா விளக்கும் நாடு அதன் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் செயல்படுவதாகும். எனவே, அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வரும் நாள்தான் குடியரசு நாள் ஆகும்.

குடியரசு தின விழா அணிவகுப்பில் சிறு வியாபாரிகளுக்கு மரியாதை

இந்திய அரசியலமைப்புச் சட்ட உருவாக்கம்:

அரசியலமைப்புச் சட்டம் என்பது ஒரு நாட்டு அரசு செய்ல்படவேண்டிய விதிமுறைகளைக் கொண்டது. இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் அப்போதைய காலனிய அரசு இந்திய அரசுச் சட்டம் 1935 என்ற சட்டத்தை இயற்றியது. இந்தச் சட்டம் பிரிட்டிஷ் அரசு தனது ஆட்சியின் கீழ் இருந்த இந்தியாவை நிர்வகிப்பதற்காக உருவாக்கியது. இதன் அடிப்படையில்தான் அப்போதைய ஆட்சி நடைபெற்றது.

இந்தியா பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்ற பிறகு இந்தியாவுக்கான பிரத்யேக அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அரசியலமைப்பு நிர்ணய மன்றம் ஏற்படுத்தப்பட்டு, அதன் மூலம் இந்திய அரசமைப்புச் சட்டம் உருவானது.

குடியரசு தினம்:

அண்ணல் அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசமைப்புச் சட்ட வரைவுக் குழு 1947ஆம் ஆண்டு ஆகஸ்டு 29ஆம் தேதி உருவாக்கப்பட்டது. இந்தக் குழு தயாரித்து அளித்த இந்திய அரசியலமைப்பு சட்டம் அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அந்த அரசியலமைப்புச் சட்டம் 1949ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி ஏற்றுக்கொள்ளப்பட்டது.

1950ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் நாள் இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாளான ஜனவரி 26ஆம் தேதியே ஆண்டுதோறும் குடியரசு நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

Republic Day wishes 2023: தேசப்பற்றை தூண்டும் குடியரசு தின வாழ்த்துகள்! நண்பர்களுக்கு அனுப்பி மகிழுங்கள்..

குடியரசு தினக் கொண்டாட்டங்கள்:

தலைநகர் டெல்லியில் இருக்கும் இந்தியா கேட்டில், பிரதமர் நாட்டுக்காக உயிர்நீத்த இந்திய ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவார். டெல்லி செங்கோட்டையில் தொடங்கும் குடியரசு தினவிழாவில் ஆண்டுதோறும் ஏதேனும் ஒரு அயல்நாட்டுத் தலைவர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்வார். குடியரசுத் தலைவர் மூவண்ணக் கொடியை ஏற்றி படைவீரர்களின் அணிவகுப்பையும் பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் மாநில அரசுகளின் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்புகளையும் பார்வையிடுவார். விழாவில் ராணுவ வீரர்களும் பல்வேறு துறைகளில் நாட்டுக்கு சேவை செய்தவர்களும் பதக்கம், விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படுவர்.

டெல்லியில் நடக்கும் குடியரசு தின அணிவகுப்பில் இடம்பெறும் அலங்கார ஊர்திகள் ஒவ்வொரு ஆண்டும் பிரத்யேகமான கருப்பொருளில் இடம்பெறும். மத்திய அரசு வழங்கும் இந்தத் தலைப்புகளில் மாநில அரசுகள் தங்கள் அலங்கார ஊர்திகளைத் தயாரித்து அணிவகுப்பில் கலந்துகொள்ளும்.

ஒவ்வொரு மாநிலத் தலைநகரங்களிலும் குடியரசு தின விழா கொண்டாடப்படும். ஆளுநர் மூவர்ணக்கொடியை ஏற்றிவைத்து காவல்துறையின் அணிவகுப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகளை கண்டுகளிப்பார். சிறப்பாகப் பணியாற்றிய காவல்துறையினருக்கும் பிற துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கும் விருதுகளும் பதக்கமும் வழங்கப்படும்.

இது தவிர ஒவ்வொரு மாநிலத்திலும் மாவட்டம் தோறும் மாவட்ட நிர்வாகம் சார்பில் குடியரசு தினவிழா நிகழ்ச்சிகள் நடைபெறும். இவற்றில் அந்தந்த கலெக்டர்கள் பங்கேற்று கொடியேற்றுவார்கள்.

Republic Day Parade 2023: குடியரசு தின அணிவகுப்பை எங்கே, எப்படி பார்க்க வேண்டும்.? முழு விபரம் இதோ !!

click me!