இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் இது வெறும் தொடக்கம்தான்: பாகிஸ்தான் எழுத்தாளர் மோஷ்ரப் சைதி கருத்து

By SG BalanFirst Published Jan 25, 2023, 4:50 PM IST
Highlights

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இப்போதுதான் தொடங்கியிருக்கிறது என்று பாகிஸ்தானைச் சேர்ந்த எழுத்தாளர் மொஷ்ரப் சைதி தனது கட்டுரையில் கூறியுள்ளார்.

பாகிஸ்தானில் இருந்து வெளியாகும் பிரபல ஆங்கில நாளிதழ் ‘தி நியூஸ்’. இதில் அந்நாட்டு எழுத்தாளர் மோஷ்ரப் சைதி எழுதிய ‘இந்தியாவின் வளர்ச்சி’ கட்டுரை வெளியாகியுள்ளது. அதில் 21ஆம் நூற்றாண்டின் பிறப்புக்குப் பின் இந்தியாவின் நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை ஆராய்ந்திருக்கிறார்.

“1999ஆம் ஆண்டு முஷரப் ஆட்சியில் இந்தியாவுடன் கார்கில் போர் மூண்டபோது, இந்தியாவின் ஜிடிபி 450 பில்லியன் டாலர். இதே காலத்தில் பாகிஸ்தானின் ஜிடிபி 63 பில்லியன் டாலர். இந்த ஒப்பீட்டை மேலும் விரிவாகப் புரிந்துகொள்ள பிற நாடுகளின் அப்போதைய நிலையையும் பார்க்க வேண்டும்.

கனடாவின் ஜிடிபி 678 பில்லியன் டாலர். பிரிட்டனின் ஜிடிபி 1.69 ட்ரில்லியன் டாலர். பிரான்ஸின் ஜிடிபி 1.49 ட்ரில்லியன் டாலர். எனவே அப்போது இந்தியா ஏழை மக்கள் வசிக்கும் ஏழை நாடுதான்.

மது அருந்திய பயணியை ‘குடிகாரர்’ என்று சொல்லக்கூடாது: விமானப் பணிக்குழுவுக்கு ஏர் இந்தியா அறிவுறுத்தல்

இன்று பிரிட்டன் 3.13 ட்ரில்லியன் டாலரும், பிரான்ஸ் 2.96 ட்ரில்லியன் டாலரும் கனடா சுமார் 2 ட்ரில்லியன் டாலரும் ஜிடிபி வைத்திருக்கின்றன. ஆனால், இந்தியாவின் ஜிடிபி 3.18 ட்ரில்லியன் டாலர். இப்போதும் இந்தியாவில் ஏழைகள் இருக்கிறார்கள். என்றாலும் இப்போதைய இந்தியா பணக்கார நாடு. இப்போது இந்தியா ஒரு பணக்கார நாடு. உலக அரங்கில் இந்தியாவுக்கான இடம் 1999ல் இருந்ததைவிட பலமடங்கு உயர்ந்துள்ளது” என்கிறார் சைதி.

கடந்த இரண்டு பத்தாண்டுகளில் இந்தியா அடைந்துள்ள பொருளாதார வளர்ச்சி ஒரு தொடக்கம்தான் என்று கூறும் சைதி, இந்தியாவின் ஏற்றுமதியைப் பற்றி அலசும்போது, “உலகின் ஏற்றுமதி வர்த்தகத்தில் 2.2 சதவீதத்தை இந்தியா மேற்கொள்கிறது. 2030ஆம் ஆண்டுக்குள் இது 4.5 சதவீதமாக உயரும் என்று மார்கன் ஸ்டான்லி அறிக்கை சொல்கிறது.” என்று சுட்டிக்காட்டுகிறார். இந்தியாவின் சில்லறை வர்த்தகம் அடுத்த ஏழு ஆண்டுகளில் இரு மடங்கு உயர்ந்து 1.8 ட்ரில்லியன் வரை உயரக்கூடும் என்றும் குறிப்பிடுகிறார்.

“தனிநபர் ஜிடிபி 2,278 டாலரில் இருந்து 5242 டாலராக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 35 ஆயிரம் டாலருக்கு அதிகமாக வருவாய் ஈட்டும் குடும்பங்களின் எண்ணிக்கை 5.6 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக உயரக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது” என்று கூறும் சைதி, “இந்தியா பணக்காரர்கள் அதிகமாக உள்ள நாடாக மாறிவருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

இந்துத்துவ அரசியல்தான் குஜராத் படுகொலைக்குப் பிறகும் நரேந்திர மோடியை பிரதமராக ஆக்கியிருக்கிறது என்றும் யோகி ஆதித்யநாத்தை வழிபடும் தொண்டர்களை உருவாக்கி இருக்கிறது என்றும் கட்டுரையில் கூறப்படுகிறது.

இந்தக் கட்டுரையைப் ட்விட்டரில் பகிர்ந்துள்ள மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் முதலில் அடல் பிகாரி வாஜ்பாயும் பின் நரேந்திர மோடியும் சென்ற இரண்டு பத்தாண்டுகளில் இந்தியாவை முன்னேற்றத்துக்கு வித்திட்டுள்ளனர் என்றும் உலகப் பொருளாதாரத்தில் 5வது இடத்தில் உள்ள இந்தியா விரைவில் 3வது இடத்தைப் பிடிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Har Ghar Jal: 11 கோடி குடிநீர் இணைப்புகள் வழங்கிய ஹர் கர் ஜல் இயக்கம்: பிரதமர் மோடி பாராட்டு

click me!