தேர்தல் ஆணையர் பதவியை அருண் கோயல் ராஜினாமா செய்தது ஏன் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
இன்னும் சில வாரங்களில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு தயாராகி வருகின்ரன. கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு உள்ளிட்ட பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. வாக்காளர்களை கவரும் வகையில் பல கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை வழங்கும் தேர்தல் அறிக்கைகளையும் தயாரித்து வருகின்றன.
இதனிடையே இந்திய தேர்தல் ஆணையர் அருண் கோயல் சனிக்கிழமையன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது பதவிக்காலம் முடிவடைய இன்னும் 3 ஆண்டுகளுக்கும் மேல் உள்ள நிலையில் அவர் ராஜினாமா செய்தது பல கேள்விகளை எழுப்பியது. குறிப்பாக 2024 மக்களவை தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னதாக அருண் கோயல் ராஜினாமா செய்தது விவாத பொருளாக மாறியது.
அருண் கோயல் ஏன் ராஜினாமா செய்தார்?
தேர்தல் ஆணையர் அருண் கோயல் சனிக்கிழமை மாலை தனது பதவியை ராஜினாமா செய்தார், மேலும் அவரது ராஜினாமாவை இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவும் ஏற்றுக்கொண்டார்.முதலில் அவர் ராஜினாமா செய்யும் முடிவை அரசு தடுக்க முயன்றதாகவும் ஆனால் அவர் அதை கேட்கவில்லை என்றும் அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தனது 'தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்வதாக அவர் அறிவித்தார். அருண் கோயலுக்கு உடல்நல பிரச்சனைகள் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், அந்த தகவல் உண்மை இல்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் அருண கோயல் ஏன் ராஜினாமா செய்தார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அருண் கோயலுக்கும் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாருக்கும் இடையே வேறுபாடு இருந்ததாக கூறப்படுகிறது. அதன் காரணமாகவே அவர் ராஜினாமா செய்ததாகவும் கூறப்படுகிறது..
இந்திய தேர்தல் ஆணையம் (ECI) மூன்று உறுப்பினர்களைக் கொண்டுள்ளது, அதில் ஒரு பதவி ஏற்கனவே காலியாக இருந்தது; இப்போது, அருண் கோயல் ராஜினாமா செய்துள்ள நிலையில், ராஜீவ் குமார் மட்டுமே தேர்தல் குழுவில் நீடிக்கிறார். எனவே அடுத்த கட்டமாக புதிய தேர்தல் ஆணையரை நியமிக்க ஒரு குழு அமைக்கப்படும்; சட்ட அமைச்சர் மற்றும் இரண்டு மத்திய செயலாளர்களை உள்ளடக்கிய இந்த குழு புதிய தேர்தல் ஆணையரை தேர்வு செய்யும்.
காங்கிரஸ் கோட்டையில் யூசுப் பதான் போட்டி! மம்தா மோடியைக் கண்டு அஞ்சுவதாக காங். பதிலடி
5 பெயர்கள் இந்த குழுவால் தேர்ந்தெடுக்கப்படும், பின்னர் தேர்வுக் குழு நடைமுறைக்கு வரும்; பிரதமர் தலைமையில் மத்திய அமைச்சரவை அமைச்சர் மற்றும் மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் அடங்கிய. தேர்வுக் குழு இப்போது அந்த 5 பேரில் ஒருவரை தேர்ந்தெடுக்கும், பின்னர் அந்த வேட்பாளர் இந்திய ஜனாதிபதியால் முறையாக நியமிக்கப்படுவார்.
யார் இந்த அருண் கோயல்?
இந்தியாவின் முன்னாள் தேர்தல் ஆணையர், அருண் கோயல் 1985-பேட்ச் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆவார்; அவர் நவம்பர் 2022 இல் இந்தியத் தேர்தல் ஆணையத்தில் ஆணையராக நியமிக்கப்பட்டார்.. பாட்டியாலாவில் பிறந்த அருண் கோயல், கணிதத்தில் எம்எஸ்சி படித்தார், மேலும் பஞ்சாபில் முதல் வகுப்பில் முதலிடம் பெற்றதற்காகவும், அனைத்துப் தேர்வுகளிலும் சாதனை படைத்ததற்காகவும் பஞ்சாப் பல்கலைக்கழகத்டில் Chancellors Medal of Excellence பட்டம் பெற்றார். .
அருண் கோயல் இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உள்ள சர்ச்சில் கல்லூரியில் பொருளாதாரம் பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார், பின்னர் அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் ஜான் எஃப் கென்னடி அரசாங்கப் பள்ளியில் பயிற்சி பெற்றார். அருண் கோயல் நவம்பர், 2022 இல் விருப்ப ஓய்வு பெற்றார், இதை தொடர்ந்து தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.