நாங்கள் தான் ஆணுறையை அதிகம் பயன்படுத்துகிறோம்.. மோகன் பகவத்துக்கு பதிலடி கொடுத்த ஓவைசி’

By Raghupati RFirst Published Oct 9, 2022, 6:41 PM IST
Highlights

எப்போதெல்லாம் நாட்டில் பாஜக ஆட்சி நடக்கிறதோ அப்போதெல்லாம் முஸ்லிம்கள் ஒரு திறந்த சிறையில் தான் இருக்கிறோம். இங்கு தெரு நாய்களுக்கு இருக்கும் மரியாதை கூட முஸ்லிம்களுக்கு இல்லை.

ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் மத்தியில் சமீபத்தில் பேசிய மோகன் பகவத், ‘நமது நாட்டில் மக்கள் தொகை கட்டுப்பாடு சட்டம் அவசியம். மத அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்துள்ளன.

அதேபோல் கட்டாய மதமாற்றமும் அதிகரித்து இருக்கிறது. மக்கள்தொகை கட்டுப்பாடு மட்டுமின்றி, மத அடிப்படையிலான மக்கள்தொகை சமநிலையும் முக்கியத்துவம் வாய்ந்த விஷயம். இதை நாம் ஒருபோதும் புறக்கணிக்க முடியாது’ என்று கூறினார். தற்போது அதற்கு ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி பதிலடி கொடுத்திருக்கிறார்.

இதையும் படிங்க..‘ஈபிஎஸ் அணியில் இருந்து ஓபிஎஸ் அணிக்கு தாவிய முக்கிய விக்கெட்.. அதிர்ச்சியில் எடப்பாடி தரப்பு !’

இதுகுறித்து பேசிய அவர், ‘எப்போதெல்லாம் நாட்டில் பாஜக ஆட்சி நடக்கிறதோ அப்போதெல்லாம் முஸ்லிம்கள் ஒரு திறந்த சிறையில் தான் இருக்கிறோம். இங்கு தெரு நாய்களுக்கு இருக்கும் மரியாதை கூட முஸ்லிம்களுக்கு இல்லை. பிரதமர் நரேந்திர மோடி அவர்களே குஜராத் சம்பவத்தை அறிந்தும் நீங்கள் அமைதியாக இருக்கிறீர்கள்.

இதுதான் எங்களுக்கான மாண்பா ? நீங்கள் குஜராத்தைச் சேர்ந்தவர் தானே. நீங்கள் இங்கு முதல்வராகவும் இருந்துள்ளீர்கள். உங்கள் மாநிலத்தில் முஸ்லிம்கள் ஒரு கம்பத்தில் கட்டிவைத்து அடிக்கப்படுகிறார்கள். சுற்றி நிற்கும் கூட்டம் அதைப் பார்த்து விசிலடித்து உற்சாகமடைகிறது. தயவு செய்து நீதிமன்றங்கள், போலீஸ் படைகளை எல்லாம் கலைத்துவிடுங்கள்.முஸ்லீம் மக்கள் தொகை அதிகரிக்கவில்லை.

முஸ்லீம் மக்கள் தொகை சரிந்துதான் வருகிறது. எனவே இந்த விவகாரம் குறித்து மோகன் பகவத் பேச வேண்டாம். மோகன் பகவத் குர்ஆனை படிக்க வேண்டும் என நான் அழைப்பு விடுக்கிறேன். சிசுவை கொல்வது மிகப்பெரும் பாவம் என்று அல்லா சொல்லியிருக்கிறார். கர்ப்ப கால இடைவெளியை முஸ்லீம்கள் பின்பற்றுகிறார்கள். ஆணுறைகளை அதிகம் முஸ்லீம்களே பயன்படுத்துகின்றனர்’ என்று பதிலடி கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க..திமுக ஆட்சியில் கனிம வளங்கள் கொள்ளை..பேச தயாரா? அமைச்சர் மனோ தங்கராஜுக்கு சவால் விட்ட பொன்.ராதாகிருஷ்ணன்

click me!