இந்தியாவின் முதல் சூரிய சக்தி கிராமத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி !

By Raghupati RFirst Published Oct 9, 2022, 5:30 PM IST
Highlights

குஜராத்தின் மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள மொதேரா கிராமத்தை, இந்தியாவின் முதல் சூரிய சக்தி கிராமமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று அறிவித்துள்ளார்.

1026 - 27 வரை அப்பகுதியை ஆட்சி செய்த சாளுக்கிய மரபைச் சேர்ந்த இரண்டாம் பீமன் என்ற மன்னரால் கட்டப்பட்ட புகழ்பெற்ற சூரியக் கோயில் இங்குள்ளது. இக்கிராமத்தில், 1000-க்கும் அதிகமான வீடுகளில் சூரிய ஆற்றலை மின்னாற்றலாக மாற்றும் சோலார் பேனல்கள் தற்போது இலவசமாகப் பொருத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டை அதிகரிப்பதற்கான பிரதமரின் தொலைநோக்குப் பார்வையின் ஒரு பகுதியாக, குஜராத்தில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்துவதை உறுதி செய்துள்ளதாக குஜராத் அரசு தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க..‘முதலில் எருமை, அடுத்து மாடு.. இப்போ அதுவும் போச்சா.! அடுத்தடுத்து விபத்தில் சிக்கும் வந்தே பாரத் ரயில்’

அதன்படி, தொல்லியல் சிறப்புமிக்க மோதேரா கிராமத்திலுள்ள சூரிய கோயிலில் அதன் வரலாற்றைக் குறித்து அறிவதற்கு ஏதுவாக, 3D தொழில்நுட்ப முறையிலான திரைகளை பிரதமர் மோடி அமைக்க உள்ளதாகவும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இதன்மூலம், கோயில் வளாகத்தில் ஏற்றப்படும் விளக்குகளை பக்தர்கள் கண்டுகளிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இதில் சுமார் 1,300 வீடுகள் உள்ள நிலையில் அனைத்து வீட்டின் கூரைகளிலும் சோலார் பேனல்கள் இலவசமாக பொருத்தப்பட்டுள்ளன. இந்த மெகா திட்டத்தை மத்திய மாநில அரசுகள் இணைந்து ரூ.80.66 கோடி செலவில் நிறைவேற்றியுள்ளது. பகல் நேரத்தில் சோலார் பேனல்கள் மூலமும், சூரிய அஸ்தமனத்திற்கு பின் BESS அதாவது சூரிய ஆற்றலை சேமித்து வைத்த பேட்டரி மூலமும் மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது.

இதையும் படிங்க..திமுக பிளானை காப்பி அடித்த அண்ணாமலை.. அதே இடம், அதே நேரம்.. நம்ம லிஸ்ட்லயே இல்லையே !

இந்த திட்டத்திற்காக 12 ஹெக்டேர் நிலப்பரப்பு தேவைப்பட்டது எனவும், இதன் மூலம் கிராம மக்களின் மின்சாரக் கட்டணம் 60 முதல் 100 சதவீதம் வரை சேமிக்கப்படும் அரசு தெரிவித்துள்ளது. இந்த மோதேரா கிராமத்தில் உலகப் புகழ் பெற்ற சூரிய கடவுள் கோயில் உள்ளது. அதை குறியீடாகக் கொண்ட இந்த கிராமத்தில் மெகா சூரிய மின்திட்டத்தை அரசு நிறைவேற்றியுள்ளது.

இதையும் படிங்க..‘ஈபிஎஸ் அணியில் இருந்து ஓபிஎஸ் அணிக்கு தாவிய முக்கிய விக்கெட்.. அதிர்ச்சியில் எடப்பாடி தரப்பு !’

click me!