‘முதலில் எருமை, அடுத்து மாடு.. இப்போ அதுவும் போச்சா.! அடுத்தடுத்து விபத்தில் சிக்கும் வந்தே பாரத் ரயில்’

By Raghupati R  |  First Published Oct 8, 2022, 7:25 PM IST

அடுத்தடுத்து விபத்தில் வந்தே பாரத் ரயில் சிக்கும் சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.


இந்தியாவில் இயங்கும் ரயில்களின் வேகத்தை அதிகரிக்கவும், ரயில்களின் பயணிகளுக்கு சொகுசு பயணத்தை ஏற்படுத்தி கொடுக்கவும் மத்திய அரசு புதிய திட்டத்தை கையில் எடுத்தது. அதன்படி ‛வந்தே பாரத்' ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.

மொத்தம் 75 நகரங்களை இணைக்கும் வகையில் வந்தே பாரத் ரயில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் முதல் முதலாக டெல்லி - வாரணாசி இடையே ‛வந்தே பாரத்' ரயில் இயக்கப்பட்டது. அதன்பிறகு டெல்லி - ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கத்ரா இடையே 2வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டது.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க..திமுக பிளானை காப்பி அடித்த அண்ணாமலை.. அதே இடம், அதே நேரம்.. நம்ம லிஸ்ட்லயே இல்லையே !

குஜராத் மாநிலம் காந்திநகர் - மும்பை இடையே 3வது வந்தே பாரத் ரயில் இயக்க முடிவு செய்யப்பட்டது. முந்தைய 2 வந்தே பாரத் ரயில்களை விட இந்த ரயிலில் தொழில்நுட்பங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டது. காந்திநகர் - மும்பை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி கடந்த மாதம் குஜராத்தில் தொடங்கி வைத்தார்.

இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு, காலை 11:15 மணியளவில் பட்வா - மணிநகர் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் வேகமாக சென்றது. அப்போது ரயிலுக்கு நடுவே எருமை மாடுகள் கூட்டமாக வந்தன. இதையடுத்து ரயிலின் வேகம் குறைக்கப்பட்டது. இருப்பினும் ரயில் எருமை மாடுகளின் மீது மோதி நின்றது.

இதையும் படிங்க..ஃபோர்ப்ஸ் பணக்காரர்கள் பட்டியலில் சவுதி பணக்காரர்கள் ஏன் இல்லை தெரியுமா? வெளியான ஆச்சர்ய தகவல் !

பிறகு நேற்றும் இதேபோல விபத்து நடந்தது. காந்திநகர் - மும்பை வழித்தடத்தில் சென்ற வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், குஜராத்தில் உள்ள ஆனந்த் ஸ்டேஷன் அருகே பசுக்களின் மீது ரயில் மோதியது. இது இரண்டாவது விபத்து ஆகும்.

தற்போது இன்றும் மற்றுமொரு விபத்து நடந்து உள்ளது. டெல்லி - வாரணாசி இடையே இயக்கப்பட்டபோது சக்கரங்கள் பழுதடைந்து வழியிலேயே நின்றது. கிட்டத்தட்ட ஆறு மணி நேரமாக பயணிகள் தவித்தனர். இந்த தொடர் சம்பவங்கள் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இதையும் படிங்க..பொன்னியின் செல்வன் குந்தவையாக மாறிய கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன்.. அதிர்ச்சியில் தெலங்கானா முதல்வர் KCR !

click me!