புதுவை கிரண்பேடி ஸ்டைலை கையில் எடுக்கும் தமிழிசை; ஆளும் கட்சி கலக்கம்

Published : Oct 08, 2022, 04:56 PM IST
புதுவை கிரண்பேடி ஸ்டைலை கையில் எடுக்கும் தமிழிசை; ஆளும் கட்சி கலக்கம்

சுருக்கம்

புதுச்சேரியில் முன்னாள் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பாணியில் மாதம் இரு முறை பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்க தற்போதைய துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் முடிவு செய்துள்ளார்.  

புச்சேரியில் முந்தையை நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் மாநிலத்தின் துணைநிலை ஆளுநராக கிரண்பேடி பொறுப்பு வகித்தார். துணைநிலை ஆளுநராக இருந்து கொண்டு மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்பது, அரசு அலுவலகங்களில் அதிரடி ஆய்வு மேற்கொள்வது, அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு அதிரடி காட்டினார்.

இதனால் அங்கு ஆட்சி செய்வது மாநில காங்கிரஸ் கட்சியா அல்லது மத்திய பாஜக அரசா என்ற பெரும் குழப்பமே ஏற்பட்டது. கிரண்பேடியின் நடவடிக்கைகளால் அதிருப்தி அடைந்த நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ்  கட்சியினர் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்திய பின்னர் கிரண்பேடியை மத்திய அரசு திரும்ப பெற்றது.

திருக்குறள் பற்றி ஆளுநருக்கு ஆழ்ந்த ஞானம் கிடையாது - வைகோ குற்றச்சாட்டு

இந்நிலையில், புதுச்சேரி ஆளுநர் மாளிகை இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, துணைநிலை ஆளுநரை சந்திக்க விரும்பும் பலர் தற்போது முன்பதிவு செய்து சந்தித்து வருகிறார்கள். மேலும், பலரும், பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்களும் ஆளுநரைச் சந்திக்க விரும்புவதால் இன்று முதல் ஒவ்வொரு முதல் மற்றும் மூன்றாவது சனிக்கிழமைகளில் “மக்கள் சந்திப்பு” நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆளுநரைச் சந்திக்க விரும்புபவர்கள் 0413-2334050, 2334051 தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். முன்பதிவு செய்யப்படும் முன்னுரிமை அடிப்படையில் ஆளுநரைச் சந்திக்க அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

முன்பதிவு செய்ய விரும்புபவர்கள் adctolg.pon@nic.in என்ற இணைய முகவரியிலும் பதிவு செய்யலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழிசையின் மக்கள் சந்திப்பு திட்டத்தால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆளும் அரசு சற்று கலக்கத்தில் உள்ளது.

உஷார் !! இன்று 15 மாவட்டங்களில் கனமழை.. எந்தெந்த பகுதிகளில் மழை.? வானிலை அப்டேட்
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மன்னிப்பு கோரிய இண்டிகோ நிறுவனம்.. பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு சிறப்பு வசதிகள் அறிவிப்பு!
இந்தியா நடுநிலையான நாடு அல்ல.. அமைதி தான் முக்கியம்.. புடினிடம் உறுதியாகக் கூறிய மோடி!