யாருக்கு அதிக சம்பளம் கொடுக்க வேண்டும்? உலக அழகி பட்டம் பெற்ற மானுஷியின் மெய் சிலிர்க்கும் பதில்!

 
Published : Nov 19, 2017, 02:49 PM ISTUpdated : Sep 19, 2018, 01:28 AM IST
யாருக்கு அதிக சம்பளம் கொடுக்க வேண்டும்? உலக அழகி பட்டம் பெற்ற மானுஷியின் மெய் சிலிர்க்கும் பதில்!

சுருக்கம்

who is the high paid work in the world? maanushi answer

2017 ஆண்டிற்கான உலக அழகி பட்டத்தை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார் ஹரியானாவை சேர்ந்த 20 வயதாகும் மருத்துவ துறையை சேர்ந்த மாணவி மானுஷி சில்லர். இந்த போட்டியில் கலந்துக்கொள்வதற்காக தன்னுடைய படிப்பை கூட நிறுத்திவிட்டு இந்த போட்டியில் கலந்துக்கொள்ள கவனம் செலுத்தினார். 

2000 ஆம் ஆண்டு இந்த பட்டத்தை இந்தியாவை சேர்ந்த நடிகை பிரியங்கா சோப்ரா வென்றார். அவருக்கு அடுத்து 17 ஆண்டுகளுக்கு பின் உலக அழகி பட்டத்தை வென்றுள்ளார் இந்தியாவை சேர்ந்த மானுஷி.

இந்த போட்டியின் இறுதி சுற்றில் இவரிடம், இந்த உலகில் யாருக்கு அதிக சம்பளம் கொடுக்க வேண்டும் என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த இவர்...இந்த உலகில் அதிக சம்பளம் கொடுக்க வேண்டும் என்றால் நம்மை இந்த உலகிற்கு கொண்டு வந்து ஆளாக்கிய தாய்க்கு தான் கொடுக்க வேண்டும். ஆனால் இதை பணமாக கொடுக்காமல் பாசம், மரியாதை போன்ற வழிகளில் தான் கொடுக்க வேண்டும் என்று கூறினார்.

மேலும் தனக்காக தன்னுடைய தாயார் பலவற்றை தியாகம் செய்து, தனக்கு உறுதுணையாக இருந்துள்ளார். எனவே நான் அவரை தான் கூறுவேன் என்று இவர் கூறிய பதில் ஒரு நிமிடம் அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்தது. 

இவரின் இந்த பதிலை பாராட்டி பலர் ஒரு இந்திய பெண்ணால் மட்டும் தான் இது போன்ற பதிலை கூற முடியும் என மானுஷிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

வரிவிதிப்பு சிக்கல் முடிந்தது! இந்தியா-நியூசிலாந்து FTA-ஆல் ஏற்றுமதி-இறக்குமதி எளிதாகும்
வங்கதேசத்தின் பாதுகாப்புக்கும், செழிப்புக்கும் இந்தியாவுக்கு நன்றியோடு இருங்கள்..! யூனுஷுக்கு ஷேக் ஹசீனா எச்சரிக்கை.!