வடகிழக்கு பிராந்தியத்தின் பணக்கார முதல்வர் யார்? மணிப்பூர் முதல்வருக்கு எந்த இடம்?

Published : Aug 02, 2023, 12:19 PM IST
வடகிழக்கு பிராந்தியத்தின் பணக்கார முதல்வர் யார்? மணிப்பூர் முதல்வருக்கு எந்த இடம்?

சுருக்கம்

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களின் முதல்வர்கள் சொத்துப் பட்டியல் தொடர்பாக அறிக்கை வெளியாகியுள்ளது

ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR) மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பு (NEW) ஆகியவை இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ரூ.163 கோடிக்கு மேல் சொத்துக்களுடன், அருணாச்சலப் பிரதேச முதல்வர் பெமா காண்டு வடகிழக்கு மாநிலத்தின் பணக்கார முதல்வராகவும், நாட்டின் 43ஆவது பணக்கார சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார். மணிப்பூர் முதல்வர் பைரன் சிங் அந்த பிராந்தியத்தின் பணக்கார முதல்வர்கள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளார்.

கடந்த தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பு எம்.எல்.ஏ.க்கள் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரங்களில் இருந்து எடுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR) மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பு (NEW) ஆகியவை இணைந்து இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதன்படி, ரூ.163 கோடிக்கு மேல் சொத்துக்களுடன், அருணாச்சலப் பிரதேச முதல்வர் பெமா காண்டு வடகிழக்கு மாநிலத்தின் பணக்கார முதல்வராக உள்ளார். அவருக்கு கடன்கள் எதுவும் இல்லை. நாட்டின் பணக்கார எம்.எல்.ஏ.க்களில் 43ஆவது இடத்தில் அவர் உள்ளார்.

அதற்கு அடுத்தப்படியாக இரண்டாமிடத்தில் நாகாலாந்து முதல்வர் நெய்பியு ரியோ உள்ளார். பெமா காண்டுவின் சொத்து மதிப்பை விட நெய்பியு ரியோவிடன் ரூ.100 கோடி குறைவாக உள்ளது. ரியோவின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 46 கோடியாக உள்ளது. ரூ.8 லட்சத்துக்கும் அதிகமாக அவருக்கு கடன்கள் உள்ளன.

நாடு முழுவதும் உள்ள 28 மாநில சட்டசபைகள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 4003 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அதில், 4001 எம்.எல்.ஏ.க்களின் சொத்து மதிப்பு பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, நாகாலாந்து முதல்வர் நெய்பியு ரியோ 218ஆவது இடத்தில் உள்ளார்.

மக்களவையில் டெல்லி அவசரச் சட்ட மசோதா தாக்கல்: இன்று விவாதம்!

அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, வடகிழக்கு பிராந்தியத்தின் பணக்கார முதல்வர்களில் மூன்றாவது இடத்தில் உள்ளார். அவரது அறிவிக்கப்பட்ட நிகர சொத்து மதிப்பு ரூ.17 கோடிக்கு மேல் உள்ளது. அவருக்கு ரூ.3 கோடிக்கு மேல் கடன்கள் உள்ளன. நாட்டின் பணக்கார எம்.எல்.ஏ.க்களில் 589ஆவது இடத்தில் அவர் உள்ளார்

வடகிழக்கு பிராந்தியத்தின் பணக்கார முதல்வர்களில் 4ஆவது இடத்தில் மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா உள்ளார். அவரது நிகர சொத்து மதிப்பு ரூ.14 கோடிக்கும் மேல் உள்ளது. அவருக்கு கடன்கள் ரூ.24 லட்சத்துக்கும் அதிகமாக உள்ளன. நாட்டின் 715ஆவது பணக்கார எம்.எல்.ஏ.வாக கான்ராட் சங்மா உள்ளார். அவருக்கு அடுத்து 5ஆவது இடத்தில் திரிபுரா மாநிலத்தின் முதல்வர் மாணிக் சாஹா உள்ளார். அவரது நிகர சொத்து மதிப்பு ரூ.13 கோடிக்கு மேல் உள்ளது. நாட்டின் 723ஆவது பணக்கார எம்.எல்.ஏ.வாக அவர் உள்ளார்.

இப்பகுதியின் ஆறாவது பணக்கார முதல்வர் மற்றும் நாட்டின் 1902ஆவது பணக்கார எம்.எல்.ஏ.வாக மிசோரம் முதல்வர் ஜோரம்தங்கா உள்ளார். அவரது நிகர சொத்து மதிப்பு ரூ. 3 கோடிக்கு மேல் உள்ளது. கடன்கள் இல்லை. முன்னாள் கிளர்ச்சியாளரான் அவர் மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வடகிழக்கு பிராந்தியத்தின் பணக்கார முதல்வர்கள் பட்டியலில் ஆறாவது மற்றும் கடைசி இடத்தில் இருப்பவர் தற்போது கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் முதல்வர் பைரன் சிங். 61 வயதான அவரது நிகர சொத்து மதிப்பு ரூ. 1 கோடிக்கு மேல் உள்ளது. ரூ.1 லட்சத்துக்கும் அதிகமான கடன்கள் அவருக்கு உள்ளன.

PREV
click me!

Recommended Stories

வீர் சாவர்க்கர் பெயரில் சர்வதேச விருது.. ஏற்க மறுத்த காங்கிரஸ் எம்.பி. சசி தரூர்!
பிரதமர் மோடி இதயங்களை ஹேக் செய்பவர்! மக்களவையில் தாறுமாறாக புகழ்ந்த கங்கனா ரணாவத்!