HekaniJakhalu: Nagaland : நாகாலாந்து வரலாற்றில் முதல் முறையாக 2 பெண் எம்எல்ஏக்கள் | யார் இந்த குர்ஸே, ஜக்காலு?

By Pothy Raj  |  First Published Mar 2, 2023, 1:59 PM IST

HekaniJakhalu: நாகாலாந்து மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில், மாநில வரலாற்றில் முதல்முறையாக,  பெண் எம்எல்ஏ-வாக ஹெக்கானி ஜக்காலு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.


HekaniJakhalu:நாகாலாந்து மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில், மாநில வரலாற்றில் முதல்முறையாக,  பெண் எம்எல்ஏ-வாக ஹெக்கானி ஜக்காலு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

திமாபூர்-3 சட்டசபைத் தொகுதியில் என்டிபிபி கட்சி சார்பில் போட்டியி்ட்ட ஹெக்கானி ஜக்காலு, எல்ஜேபி கட்சி வேட்பாளர் ஹீடோ ஹீமோமயைவிட 1536வாக்குகள் அதிகமாகப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

Tap to resize

Latest Videos

undefined

யார் இந்த ஹெக்கானி ஜக்காலு

நாகாலாந்து வரலாற்றில் இதுவரை ஒரு பெண் எம்எல்ஏகூட இருந்தது இல்லை. முதல்முறையாக பெண் எம்எல்ஏவான ஹெக்கானி ஜக்காலுவை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். என்டிபிபி கட்சி சார்பில் திமாபூர்-3 தொகுதியில் போட்டியிட்ட ஹெக்கானி வெற்றி பெற்றுள்ளார்

அல்பம்! ரூ.40 லட்சம் சொகுசு காரில் வந்து G-20 மாநாட்டு பூந்தொட்டிகளைத் திருடியவர்கள் கைது

48வயதான ஜக்காலு அமெரிக்காவில் சட்டம் பயின்றவர், சமூக ஆர்வலர். ஜக்காலு கடந்த 20 ஆண்டுகளாக அறக்கட்டளை ஒன்றை நிறுவி, இளைஞர்களுக்கு கல்வி தொடர்பான உதவிகளையும், அவர்களின் திறன்களைவளர்க்கத் தேவையான உதவிகளையும் செய்து வருகிறார். 

ஹெக்கானி ஜக்காலூ பிரச்சாரத்தின்போது அளித்த பேட்டியில் “ நாகலாந்து மக்களின் மனநிலையில் மாற்றம் வருகிறது. அதற்கு ஏற்றார்போல், என்டிபிபி கட்சி என்னை களமிறக்கியுள்ளது. மற்றொரு வேட்பாளராக 56வயதான குர்சே, மேற்கு அகாமி தொகுதியில் போட்டியிடுகிறார்” எனத் தெரிவித்தார்

ஜக்காலுவைப் போலவே என்டிபிபி பெண் வேட்பாளர் குர்ஸேவும் தொண்டுநிறுவனங்களில் பணியாற்றி வருகிறார். இது தவிர காங்கிரஸ் சார்பில் டென்னிங்தொகுதியில் ரோஸி தாம்ஸனும்(வயது58) போட்டியிடுகிறார். இவர் கடந்த 30 ஆண்டுகளாக சமூக சேவகராக இருந்து வருகிறார்

திரிபுராவில் மீண்டும் பாஜக ஆட்சி! திப்ரா மோத்தா கட்சிக்கு வலைவீசும் பாஜக

நாகாலாந்து பொதுப்பணித்துறையில் தலைமைப் பொறியாளராக இருந்து ஓய்வு பெற்ற கஹுலி சீமாவை பாஜக களமிறக்கியது. 

கடந்த 2018ம் ஆண்டு தேர்தலில் முதல் பெண் எம்எல்ஏ வரவேண்டியது. ஆனால், நாகா மக்கள் முன்னணி பெண் வேட்பாளர் அவான் கோன்யாக் 905 வாக்குகளில் அபோய் தொகுதியில் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

2-வது பெண் எம்எல்ஏ

நாகாலாந்தில் 2-வது பெண் எம்எல்ஏவும் இந்தத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் என்டிபிபி கட்சி சேர்ந்த சல்ஹுட்டோனு குர்ஸே. மேற்கு அங்காமி தொகுதியில் போட்டியிட்ட குர்ஸே வெற்றி பெற்றுள்ளார். நாகாலாந்தில் ஹோட்டல் தொழிலில் குர்ஸே ஈடுபட்டு வருகிறார். 

நாகாலாந்து மாநிலம் 1963ல் உருவாக்கப்பட்டபின் இதுவரை ஒருமுறைகூட பெண் எம்எல்ஏ தேர்ந்தெடுக்கப்படவில்லை. பெண்கள் போட்டியிட்டாலும் அவர்கள் வெற்றி பெற்றது இல்லை. இந்தமுறை என்டிபிபி கட்சி சார்பில் ஜக்காலு, குர்ஸே, காங்கிரஸ் சார்பில் தாம்ஸன், பாஜக சார்பில் சீமா ஆகியோர் போட்டியிட்டனர்.

நாகாலாந்தில் முதல் பெண்னாக, கடந்த 1977ம் ஆண்டு ரானோ எம் ஷாய்ஸா என்ற பெண் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2022ம் ஆண்டில் பாங்நான் கோன்யாக் என்ற பெண் நாகாலாந்தில் இருந்து பாஜக சார்பில் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

click me!