திரிபுரா, நாகாலாந்து மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் முடிந்து வாக்குகள் எண்ணப்பட்டு வரும்நிலையில், இரு மாநிலங்களிலும் பாஜக ஆட்சியைத் தக்கவைக்கும் என்று தேர்தல் ஆணையத்தின் நிலவரங்கள் தெரிவிக்கின்றன
திரிபுரா, நாகாலாந்து மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் முடிந்து வாக்குகள் எண்ணப்பட்டு வரும்நிலையில், இரு மாநிலங்களிலும் பாஜக ஆட்சியைத் தக்கவைக்கும் என்று தேர்தல் ஆணையத்தின் நிலவரங்கள் தெரிவிக்கின்றன
திரிபுராவில் உள்ள 60 சட்டசபைத் தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி மாதம் 16ம் தேதியும், நாகாலாந்தில் உள்ள தலா 60 சட்டசபைத் தொகுதிகளுக்கும் கடந்த மாதம் 27ம் தேதி தேர்தல் நடந்தது. இந்த தேர்தல் முடிந்து வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன.
இதில் திரிபுரா மாநிலத்தில் கடந்த 30 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த இடதுசாரிகளை அகற்றிவிட்டு, கடந்த 2019ம் ஆண்டு 36 இடங்களை கைப்பற்றி பாஜக ஆட்சியில் அமர்ந்தது.பாஜகவை இந்த முறை ஆட்சியி்லிருந்து அகற்ற வேண்டும் என்ற நோக்கில் பரமவைரியான காங்கிரஸ் கட்சியோடு, இடதுசாரிகள் கூட்டணி சேர்ந்து தேர்தலைச் சந்தித்தனர்.
திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா தேர்தல் முடிவுகள் - வாக்கு எண்ணிக்கை தீவிரம்
இது தவிர பழங்குடியினருக்கு தனியாக இடம்,பகுதி தேவை என வலியுறுத்தி திப்ரா மோத்தா கட்சியும் களம் கண்டது.
தேர்தல் முடிவுகளில் தொடக்கத்தில் பாஜக ஆட்சியைத்தக்கவைக்கும் வகையில் முன்னிலையில் சென்றது. ஆனால் நேரம் செல்லச் செல்ல, பாஜக பின்னடைவைச் சந்தித்தது. இடதுசாரி, காங்கிரஸ் கூட்டணி , திப்ரா மோத்தா கட்சியும் தங்கள் நிலையை வலுப்படுத்தின.
ஆனால், ஒருகட்டத்தில் பாஜக மீண்டும் பெரும்பான்மையை நோக்கி நகர்ந்தது. தற்போது திரிபுராவில் ஆட்சியைத் தக்கவைக்கும் வகையில், 34 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இடதுசாரிகள், காங்கிரஸ் கட்சி 15 இடங்களிலும், திப்ரா மோத்தா கட்சி 11 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.
இதன் மூலம் பாஜக தொடர்ந்து திரிபுராவில் ஆட்சியைத் தக்கவைக்கிறது என்பது களநிலவரங்கள் மூலம் தெரியவருகின்றன
நாகாலாந்தில் நடந்த 60 தொகுதிகளுக்கான சட்டசபைத் தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் பாஜக-என்டிபிபி கூட்டணி பெரும்பான்மைக்கு அதிகமாக முன்னிலையுடன் நகர்வதால், ஆட்சியைத் தக்கவைக்கிறது. பாஜக என்டிபிபி கூட்டணி 39 இடங்களில் முன்னிலையுடன் உள்ளன. ஆட்சி அமைக்க 31 இடங்கள் தேவை , ஆனால் 39 இடங்களில் பாஜக என்டிபிபி கூட்டணி முன்னிலையில் உள்ளது.
நாகாலாந்தில் ஆண்ட கட்சியான என்பிஎப் கட்சி 3 இடங்களில் மட்டும் முன்னிலையில் உள்ளன. காங்கிரஸ் கட்சி தொடக்கத்தில் ஒரு இடத்தில் முன்னிலையில் இருந்தநிலையில் காங்கிரஸ் கட்சி பூஜ்ஜிய நிலையில் உள்ளது.
ராகுல் காந்தியின் 'நியூ லுக்’ ! ஹேர்கட், தாடியில்லை, நோ டிஷர்ட்
நாகாலாந்தில் ஒரு காலத்தில் ஆட்சி அமைத்திருந்த காங்கிரஸ் கட்சி இப்போது மக்களால் துடைத்து எறியப்பட்டுள்ளது. நாகாலாந்தில் கடந்த 1993 முதல் 2003 வரை 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி கடந்த 20 ஆண்டுகளாக அடையாளம் தெரியாத அளவுக்கு நசுங்கி வருகிறது.
இந்தத் தேர்தலில் வெறும் ஒரு இடத்தில் மட்டுமே காங்கிரஸ் முன்னிலை பெற்றநிலையில் இப்போது முதலுக்கே மோசம் வந்துவிட்டதுபோல் அதையும் பறிகொடுத்துவிட்டது.