திரிபுராவில் ஆளும் பாஜக ஆட்சியைத் தக்கவைக்கிறது என்று தேர்தல் முடிவுகள் வாயிலாக தெரியவருகிறது. அதேநேரம், புதிதாக களம்கண்ட திப்ரா மோத்தா கட்சிக்கும் பாஜக வலைவீசத் தொடங்கியுள்ளது.
திரிபுராவில் ஆளும் பாஜக ஆட்சியைத் தக்கவைக்கிறது என்று தேர்தல் முடிவுகள் வாயிலாக தெரியவருகிறது. அதேநேரம், புதிதாக களம்கண்ட திப்ரா மோத்தா கட்சிக்கும் பாஜக வலைவீசத் தொடங்கியுள்ளது.
திரிபுரா மாநிலத்தில் உள்ள 60 தொகுதிகளுக்கும் சட்டசபைத் தேர்தல் நடந்து முடிந்து, வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஆளும் கட்சியான பாஜக ஆட்சியைத் தக்கவைக்கும் வகையில் தொடக்க சுற்று முடிவுகள் வந்தன.பின்னர் ஒவ்வொரு சுற்றுகள் எண்ணப்பட்டு முடிக்கும்போதும் பாஜக நிலை மாறியது.
undefined
இந்நிலையில் சமீபத்திய முடிவுகளின்படி, திரிபுராவில் பாஜக 34 இடங்களில் முன்னிலை பெற்று, மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் 2வது முறையாக ஆட்சிஅமைக்கும் சூழல் உருவாகியுள்ளது.
Breaking: திரிபுரா, நாகாலாந்தில் ஆட்சியைத் தக்கவைக்கிறது பாஜக
இந்நிலையில் கடந்த 2019ம் ஆண்டு தொடங்கப்பட்ட திப்ரா மோத்தா கட்சி, தான் சந்தித்த முதல் தேர்தலில் 11 இடங்களில் முன்னிலையுடன் நகர்ந்து வருகிறது. இடதுசாரி, காங்கிரஸ் கூட்டணி 15 இடங்களில் முன்னிலையுடன் உள்ளது.
பாஜகவுக்கு பெரும்பான்மை இடங்கள் கிடைத்துவிட்ட நிலையில் வேறு எந்தக் கட்சியின் ஆதரவும் தேவைப்படாத நிலையை எட்டிவிட்டது. இருப்பினும், திப்ரா மோத்தா கட்சிக்கு தனது வலையை வீசியுள்ளது.
பாஜக மாநில செய்தித்தொடர்பாளர் சுப்ரதா சக்ரவர்த்தி கூறுகையில் “ திரிபுராவில் பாஜக 2வது முறையாக ஆட்சி அமைக்கிறது. இதை தொடக்கத்தில் இருந்து கூறி வருகிறோம். சம்பித் பத்ரா, பனின்திரநாத் சர்மா இருவரும் சூழலை கண்காணித்தார்கள். இன்னும் அதிகமான மத்திய தலைவர்கள் வருவார்கள். தேபர்மா கட்சியின் ஆதரவை தேவைப்பட்டால் கோருவோம். ஆனால், கிரேட்டர் திரிபுராநிலம் என்ற கோரி்க்கையைத் தவிர அனைத்து கோரிக்கைகளையும் ஏற்போம்” எனத் தெரிவித்தார்
அல்பம்! ஜி-20 மாநாட்டுப் பூந்தொட்டிகளை ரூ.40 லட்சம் சொகுசு காரில் வந்து திருடியவர்கள் கைது
2019ம் ஆண்டு கட்சி தொடங்கி, அசுரவளர்ச்சியில் உள்ள திப்ரா மோத்தா கட்சி தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ், இடதுசாரிக்கு கடும் சவாலாக இருக்கிறது. திரிபுராவில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை ஒருவேளை கிடைக்காத பட்சத்தில் கிங் மேக்கராக திப்ரா மோத்தா கட்சி இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
பிரத்யோத் கிஷோர் மணிக்யா தீபர்மா என்பவரால் உருவாக்கப்பட்ட திப்ரா மோத்தா கட்சி, அடுத்த மாநிலத்தை யார் ஆளப்போகிறார்கள் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும். 20 ரிசர்வ் தொகுதியில் திப்ரா மோத்தா கட்சி 12 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பழங்குடியினர் வாழும் பகுதிகளில் வாக்குகளைப் பெறமுடியாமல் பாஜக, காங்கிரஸ், இடதுசாரிகள் திணறி வருகிறார்கள், அவர்களின் வாக்குகளை எல்லாம் திப்ரா மோத்தா அறுவடை செய்துவருகிறது.