ORS கரைசல் கண்டுபிடித்த டாக்டர் திலீப் மஹாலானாபிஸுக்கு பத்ம விபூஷண் விருது ! யார் இவர்.? முழு விபரம்

By Raghupati R  |  First Published Jan 25, 2023, 11:36 PM IST

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த மறைந்த மருத்துவர் திலீப் மஹாலானாபிஸுக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.


மத்திய அரசின் உயரிய விருதான பத்ம விருதுகள் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 26 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த மறைந்த மருத்துவர் திலீப் மஹாலானாபிஸுக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நீர்ச்சத்து குறைபாட்டுக்கு தீர்வு காணும் ஓ.ஆர்.எஸ்.கரைசலை கண்டுபிடித்த சாதனைக்குரியவர் மருத்துவர் திலீப். 

வயிற்றுப்போக்கு மற்றும் காலரா போன்ற நோய்களின் போது ஏற்படும் நீர் இழப்பை எதிர்த்துப் போராடுவதற்குப் பரிந்துரைக்கப்பட்ட ORS கண்டுபிடித்தவர் திலிப் மஹாலனோபிஸ். உலகளவில் ஐந்து கோடி உயிர்களைக் காப்பாற்றியுள்ளது. ஆனால், இந்த மருந்தை கண்டுபிடித்த திலிப் பற்றி உலகம் அதிகளவில் அறியவில்லை. போற்றப்படாத மருத்துவராக இருந்து மறைந்தவர். 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க..பத்ம விருதுகள்: முலாயம் சிங் யாதவ், சுதா மூர்த்தி, கீரவாணி!.. யார் யாருக்கு விருது? முழு பட்டியல் !!

"20 ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமான மருத்துவக் கண்டுபிடிப்பு" என்று தி லான்செட் ORS-ஐ அங்கீகரித்தது. வயிற்றுப்போக்கு, காலரா மற்றும் நீரிழப்பு ஆகியவற்றால் ஏற்படும் இறப்புகளை 93 சதவிகிதம் குறைத்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபரில் தனது 88வது வயதில், கொல்கத்தாவில் திலிப் மறைந்தார். ஆனால், அவரது கண்டுபிடிப்புக்கு அவர் காப்புரிமை பெறவில்லை.

உலக சுகாதார அமைப்பின் ஆய்வின்படி, வயிற்றுப்போக்கு மற்றும் காலரா போன்ற நோய்கள் பல வளரும் நாடுகளில் குழந்தைகள் மற்றும் சிறு குழந்தைகளின் இறப்புக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக இருக்கிறது.  அங்கு நோயாளி நீரிழப்பு காரணமாக இறக்கின்றனர்.

டாக்டர் மஹாலனாபிஸ் 1975 முதல் 1979 வரை ஆப்கானிஸ்தான், எகிப்து மற்றும் ஏமனில் உலக சுகாதார அமைப்புக்கான காலரா கட்டுப்பாட்டுத்துரையில் பணியாற்றினார். மேலும் 1980 ஆம் ஆண்டுகளில் பாக்டீரியா நோய்களை நிர்வகிப்பது குறித்த ஆராய்ச்சியில் உலக சுகாதார அமைப்பில் ஆலோசகராக பணியாற்றினார். 2002 ஆம் ஆண்டில் கொலம்பியா பல்கலைக்கழகம் இவருக்கு பொலின் விருது வழங்கி கவுரவித்தது.

இதையும் படிங்க..Bank Holiday: வங்கிக்கு 5 நாட்கள் விடுமுறை!.. வாடிக்கையாளர்களே உஷார்!! எப்போது தெரியுமா.?

இதையும் படிங்க..முதல்வருக்கு திடீரென போன் போட்ட ஆளுநர் ஆர்.என் ரவி!.. ஆடிப்போன திமுக நிர்வாகிகள்! என்ன நடந்தது.?

click me!