பத்ம விருதுகள்: முலாயம் சிங் யாதவ், சுதா மூர்த்தி, கீரவாணி!.. யார் யாருக்கு விருது? முழு பட்டியல் !!

By Dhanalakshmi GFirst Published Jan 25, 2023, 10:57 PM IST
Highlights

உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சியின் நிறுவனருமான மறைந்த முலாயம் சிங் யாதவ், மறைந்த பிரபல மருத்துவர் திலிப் மஹாலனோபிஸ்,  இசைக் கலைஞர் ஜாகிர் ஹூசைன், கர்நாடகா முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா, கணிதவியலாளர் ஸ்ரீநிவாஸ் வரதன் ஆகியோருக்கு நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது. 

சுதா மூர்த்தி, தொழிபதிபர் குமார் மங்களம் பிர்லா உள்பட 9 பேருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது.  ராகேஷ் ராதேஸ்யாம் ஜூன்ஜூன்வாலா, ஆர்ஆர்ஆர் இசையமைப்பாளர் எம்எம் கீரவாணி, நடிகை ரவீனா டாண்டனுக்கு உள்பட 91 பேருக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. 

74-வது குடியரசு தினத்தை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சகம் பத்ம விருதுகளை புதன்கிழமை அறிவித்தது. 6 பேருக்கு பத்ம விபூஷன் விருதும், 9 பேருக்கு பத்ம பூஷன் விருதும், 91 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டுள்ளது. பொது விவகாரத் துறையில் முலாயம் சிங் யாதவுக்கு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது. யாதவ் உத்தரபிரதேசத்தின் முதல்வராக 1989, 1993 மற்றும் 2003 ஆகிய மூன்று முறை பதவி வகித்தார். 

இதையும் படிங்க..நாங்கள் வாரிசுகள் தான்.! ஆனா எதற்கு தெரியுமா? லிஸ்ட் போட்டு தெறிக்கவிட்ட முதல்வர் மு.க ஸ்டாலின் !!

முலாயம் சிங் யாதவ் ஏழு முறை லோக்சபா எம்பியாகவும், 10 முறை எம்எல்ஏவாகவும் இருந்தவர். மேலும் ஐக்கிய முன்னணி கூட்டணி அரசாங்கத்தில் ஒருமுறை மத்திய பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்தார். 1967 ஆம் ஆண்டு, தனது 27வது வயதில், ஜஸ்வந்த் நகரில் இருந்து உத்தரபிரதேச எம்.எல்.ஏ.வாக தேர்வானார்.  சமாஜ்வாடி கட்சியை 1992 ஆம் ஆண்டில் துவக்கினார்.

மேலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த இருளர் பழங்குடியினத்தைச் சேர்ந்த பாம்புபிடி வீரர்களான வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோர் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த மறைந்த மருத்துவர் திலீப் மஹாலானாபிஸுக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நீர்ச்சத்து குறைபாட்டுக்கு தீர்வு காணும் ஓ.ஆர்.எஸ்.கரைசலை கண்டுபிடித்த சாதனைக்குரியவர் மருத்துவர் திலீப்.

இதையும் படிங்க..Bank Holiday: வங்கிக்கு 5 நாட்கள் விடுமுறை!.. வாடிக்கையாளர்களே உஷார்!! எப்போது தெரியுமா.?

தமிழகத்தை சேர்ந்த பின்னணி பாடகி வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் இசையமைப்பாளர் கீரவாணிக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கலைப்பிரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கல்யாணசுந்தரம் பிள்ளைக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சமூக சேவைக்காக தமிழ்நாட்டைச் சேர்ந்த பாலம் கல்யாண சுந்தரத்துக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியை சேர்ந்த மருத்துவர் நளினி பார்த்தசாரதிக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பாலிவுட் நடிகை ரவீனா டாண்டனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் உசேனுக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

முழு பட்டியலை கானா : இதனை க்ளிக் செய்யவும் !!

இதையும் படிங்க..முதல்வருக்கு திடீரென போன் போட்ட ஆளுநர் ஆர்.என் ரவி!.. ஆடிப்போன திமுக நிர்வாகிகள்! என்ன நடந்தது.?

click me!