ஹேமந்த் சோரனின் கைதுக்குப் பின் அவரது மனைவி கல்பனா சோரன் அடுத்த முதல்வராகலாம் என்று பேசப்பட்டது. ஆனால், திடீரென அவருக்குப் பதிலாக சம்பாய் சோரன் முதல்வராகத் தேர்வாகி இருக்கிறார்.
ஜார்க்கண்டில் மாநில போக்குவரத்துத்துறை அமைச்சராக இருக்கும் சம்பாய் சோரன் அந்த மாநிலத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்க இருக்கிறார். அதை உறுதிசெய்யும் வகையில் அவர் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் சட்டமன்றக் கட்சித் தலைவராக புதன்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சம்பாய் சோரன் ஜார்கண்ட் மாநிலத்தின் ஆளும் ஜே.எம்.எம். கட்சியில் மூத்த தலைவர்களில் ஒருவர். 67 வயதான இவர் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர். தற்போது ஜார்க்கண்ட் மாநிலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருக்கிறார்.
நவம்பர் 1956 இல் ஜார்கண்டின் சரைகேலா-கர்சவான் மாவட்டத்தில் உள்ள ஜிலிங்கோரா கிராமத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை சிமல் சோரன். தனது ஆரம்பக் கல்வியை அரசுப் பள்ளியில் படித்து 10ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்தார். இளமையிலேயே அரசியலில் ஈடுபாடு கொண்டிருந்தார். ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினார்.
ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் கைது; 6 மணிநேர விசாரணைக்குப் பின் அமலாக்கத்துறை அதிரடி
ஜார்க்கண்ட் புலி:
இவரது அரசியல் வாழ்க்கை பல குறிப்பிடத்தக்க மைல்கற்களைக் கொண்டது. ஜார்க்கண்ட் மாநிலம் உருவாவதற்கான இயக்கத்தில் இவரது செயல்பாடுகளுக்காக 'ஜார்க்கண்ட் புலி' என்று அழைக்கப்பட்டார். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவில் சேருவதற்கு முன்பே, முதல் முறையாக சரைகேலா தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
சம்பாய் சோரன் இதுவரை ஏழு முறை எம்.எல்.ஏ.வாக தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார். ஜார்க்கண்டில் உள்ள சரைகேலா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். இவருக்கு ஏழு பிள்ளைகள் உள்ளனர்.
ஹேமந்த் சோரனுக்கும் இவருக்கும் பெயரில் ஒற்றுமை இருந்தாலும் இவர் ஹேமந்த் சோரன் குடும்பத்தைச் சேர்த்தவர் இல்லை. ஆனால், ஹேமந்த் சோரனின் தந்தை சிபு சோரனின் விசுவாசியாக அறியப்படுகிறார்.
சீனாவுக்கு உளவு பார்ப்பதாகப் பிடிபட்ட புறா 8 மாதங்களுக்குப் பின் விடுதலை!
கல்பனா சோரன் பெயருக்கு எதிர்ப்பு
ஜார்கண்டில் நிலவும் அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில், ஹேமந்த் சோரனின் கைதுக்குப் பின் அவரது மனைவி கல்பனா சோரன் அடுத்த முதல்வராகலாம் என்று பேசப்பட்டது. ஆனால், திடீரென அவருக்குப் பதிலாக சம்பாய் சோரன் முதல்வராகத் தேர்வாகி இருக்கிறார்.
ஹேமந்த் சோரன் இல்லத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆலோனைக் கூட்டத்தில் கல்பனா சோரனும் கலந்துகொண்டிருந்தார். அப்போது, ஜேஎம்எம் எம்எல்ஏக்கள் மத்தியில் கல்பனாவை முதல்வராக்க எதிர்ப்பு எழுந்ததாகக் கூறப்படுகிறது.
பெங்களூரு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு கம்ப்யூட்டர் பயிற்சி வழங்கும் boAt!