
ரயிலில் முன்பதிவு செய்து காத்திருப்போருக்கு ...இனி”கட்டாயம் இடம் கிடைக்கும்”
ரயில் பயணத்திற்கு முன்பதிவு செய்து காத்திருக்கும் பயணிகள் அதற்கு மாற்றாக வேறு ரயிலில் பயணம் செய்ய விருப்பம் தெரிவித்து இருந்தால், இனி கண்டிப்பாக அவர்களுக்காக டிக்கெட் கிடைக்கும் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
அதாவது மெயில், எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு செய்து காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணிகள், அவர்கள் செல்லும் இடத்தின் வழியாக செல்லக் கூடிய மற்ற ரயில்களான சதாப்தி மற்றும் ராஜ்தானியில் இடம் இருக்கும் பட்சத்தில் அந்த ரயிலில் பயணம் செய்ய டிக்கெட் கிடைக்கும்.
இதற்கு முன்னதாக , காத்திருக்கும் பட்டியலில் பயணிகளின் பெயர் பட்டியல் இருந்தால், அவர்களுக்கு டிக்கெட் கிடைக்காத பட்சத்தில், அதற்கான கட்டண பணத்தை அவர்களின் வங்கி கணக்கிற்கு திரும்ப பெறப்படும்.
இந்நிலையில் மாற்று ரயிலில் பயணம் செய்ய விருப்பம் தெரிவித்து இருந்தால் , அவர்களுக்கு டிக்கெட் கிடைப்பதுடன் , சேவையும் நல்ல முறையில் கிடைக்கப் பெறுகிறது .
இந்த அற்புத திட்டமானது, டெல்லியில் இருந்து லக்னோ, ஜம்மு, மும்பை செல்லும் தடங்களில் மட்டும் நவம்பர் 1 ஆம் தேதியில் இருந்து பரிசோதனை முயற்சியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கூடிய விரைவில் கவுன்டர்களில் டிக்கெட் வாங்குவோரும் பயன்படுத்தும் விதமாக சாப்ட்வேர் தயாரிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது .