இனி ரயிலில் டிவி சீரியல் பார்க்கலாம் - மத்திய அரசின் புதிய திட்டம்

 
Published : Mar 22, 2017, 12:26 PM ISTUpdated : Sep 19, 2018, 02:44 AM IST
இனி ரயிலில் டிவி சீரியல் பார்க்கலாம் - மத்திய அரசின் புதிய திட்டம்

சுருக்கம்

tv serial in train

ரயிலில் பயணம் செய்துக்கொண்டே டிவி சீரியல், திரைப்படங்கள், ரேடியோ என அனைத்து  சேவையை வழங்க ரயில்வே திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது .

பயணிகளின் விருப்பத்திற்கு ஏற்ப,  ஸ்மார்ட்போன், லேப்டாப், போன்றவற்றில் ரயில் பயணம் செய்யும் போதே, ரேடியோ, டிவி சீரியல் என அனைத்தும் பார்க்கும் வசதியை அடுத்த மாதம் முதல் வழங்க ரயில்வே துறை திட்டம் போட்டுள்ளது.

ரயில்வே துறையின் வருவாயை அதிகரிக்கும் பொருட்டு, பிற வருவாய் மூலம் எப்படி வருமானத்தை ஈட்டமுடியும் என திட்டம் வகுத்து வருவதாக ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்தார்.

அதன்படி, வைபை மூலமாக  ரயில் நிலையங்களில் காத்திருக்கும் போது ரேடியோ மற்றும் வீடியோ  சேவையை பெற வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் மூலம், பயணிகளின் கட்டணம் தவிர்த்து ரயில்வே துறைக்கு பிற வருவாய் மூலம் வருமானம்  அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

PREV
click me!

Recommended Stories

சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!
பள்ளிகளில் பகவத் கீதை வாசிப்பது கட்டாயம்..! முதல்வர் அதிரடி உத்தரவு..!