ரயில்ல அதிகமாக காசு கொடுத்து சாப்பாடு வாங்காதீங்க… புதிய விலைப்பட்டியலை பாருங்க

Asianet News Tamil  
Published : Mar 22, 2017, 10:30 AM ISTUpdated : Sep 19, 2018, 02:44 AM IST
ரயில்ல அதிகமாக காசு கொடுத்து சாப்பாடு வாங்காதீங்க… புதிய விலைப்பட்டியலை பாருங்க

சுருக்கம்

new food price list in railway

ரயிலில் செல்லும் பயணிகள் உணவுக்கு அதிகமான கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்ற ரெயில்வே அமைச்சகத்துக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.

இதையடுத்து, குடிநீர், டீ, காபி, காலை சிற்றுண்டி, மதியஉணவு, (சைவம், அசைவம்,) இரவு உணவு ஆகியவற்றுக்கான புதிய விைலப்பட்டியலை ரெயில்வே அமைச்சகம் வெளியி்ட்டுள்ளது.

இந்த விலையைக்காட்டிலும் அதிகமாக விலையில் உணவுகள் விற்பனை செய்யப்பட்டால், அது குறித்து ரெயில்வே அமைச்சகத்துக்கு @Railminindia என்ற தளத்தில் பயணிகள் புகார் அளிக்கலாம் என்று ரெயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல், ரெயிலில் உணவு சப்ளை செய்யும் நிறுவனங்கள், நிறுவனங்கள், ஐ.ஆர்.சி.டி.சி., அதிகாரிகள், ஆகியோருடன் ஒரு கலந்தாய்வு செய்து, ஒரு வீடியோஒன்றையும் வெளியிட்டுள்ளது.

அந்த வீடியோவில் அனைத்து சாப்பாடு பொருட்களின் விலையும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், பயணிகளுக்கு வழங்கப்படும் சாப்பாடு விலை நிர்ணயிக்கப்பட்ட விலையைக்காட்டிலும் அதிகமாக இருந்தாலோ, அல்லதுதரமற்றதாக இருந்தாலோ அல்லது எடை குறைவாக இருந்தாலோ உடனடியாக புகார் அளிக்கலாம். புகார்களுக்கு உடனுக்குடன் பதில் அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ரெயிலவே அமைச்சர் சுரேஷ்பிரபு கடந்த மாதம், ரெயில்வே துறைக்கான புதிய கேட்டரிங் கொள்கையை அறிமுகப்படுத்தினார்.

அதில் ரெயில்வே துறையில், பயணிகளுக்கு வழங்கப்படும் உணவு, சமைக்கப்படும் உணவு, தரம் , அளவு ஆகியவை குறித்து பயணிகள் அளிக்கும் புகார்களை உடனுக்குடன்ஆய்வு செய்து தீர்வு காண தனி அமைப்பை உருவாக்க முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

PREV
click me!

Recommended Stories

நாளை நடக்கப்போகும் மாபெரும் சம்பவம்.. உலகமே வியக்கப்போகும் இந்தியா..!
குடியரசு தின விழாவிற்கு பாரம்பரிய முறைப்படி சாரட் வண்டியில் வந்த குடியரசு தலைவர்