
காவிரி நீர் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. நேற்று நடந்த விசாரணையின்போது, தமிழகத்துக்கு 2000 டிஎம்சி காவிரி தண்ணீர் திறந்து விட வேண்டும் என உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
மேலும், ஜூலை 11ம் தேதி வரை எந்த தடையும் இல்லாமல், தொடர்ந்து வழங்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு, நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
ஆனால், அதன்படி தண்ணீர் தர முடியாது என கார்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா தெரிவித்தார். மேலும், தற்போது கர்நாடகா அணைகளில் தண்ணீர் இல்லை. எனவே காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என திட்டவட்டமாக கூறிவிட்டார்.