வானில் திடீரென தோன்றிய ஒளி.. வியப்பில் மக்கள் - விஷயத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த மக்கள் !

By Raghupati RFirst Published Dec 8, 2022, 2:41 PM IST
Highlights

ஹைதராபாத்தில் கடந்த புதன்கிழமை அன்று, வானில் காணப்பட்ட வெள்ளை நிற பறக்கும் பொருள் மக்களிடையே பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

இதுகுறித்து கூறிய பொதுமக்களில் சிலர்,இது அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் (UFO) தானே, இல்லை வேறு ஏதாவது ஒன்றா ? என்று கூறினார். இதுகுறித்து பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

அதில் பதிவிட்ட ஒருவர், இன்று காலை விசித்திரமான நிகழ்வு ஒன்று நிகழ்ந்தது. இது ஒரு கிரகமா, நட்சத்திரமா அல்லது யுஎஃப்ஒவா என்று தெரியவில்லை’ என்று பலரும் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டனர். இருப்பினும், இது மேம்பட்ட வளிமண்டல ஆய்வுக்காக வெளியிடப்பட்ட ஹீலியம் பலூன் என்று நிபுணர்கள் தெளிவுபடுத்தி உள்ளனர்.

இதையும் படிங்க.. Gujarat Election Result 2022: மோடியின் சொந்த ஊர் தொகுதியைக் இந்த முறை கைப்பற்றுகிறது பாஜக: காங்கிரஸ் தோல்வி

இதுகுறித்து பேசிய பிளானட்டரி சொசைட்டி ஆஃப் இந்தியா இயக்குனர் என்.ரகுநந்தன், வெள்ளை நிறத்தில் உள்ள பொருள் குறித்து பலரிடம் இருந்து கேள்விகள் வந்தது. இது வளிமண்டல ஆய்வுகளுக்காக அனுப்பப்பட்ட ஒரு ஆராய்ச்சி ஹீலியம் பலூன். டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபண்டமெண்டல் ரிசர்ச் (டிஐஎஃப்ஆர்) மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஆகியவற்றின் கூட்டு நிர்வாகத்தின் கீழ் உள்ள அடுக்கு மண்டல பலூன் ஏவுதளத்தில் வெளியிட்டு இருக்கலாம்.

இந்த ஹீலியம் பலூன் கிட்டத்தட்ட 1,000 கிலோ எடையுள்ள அறிவியல் கருவிகளை எடுத்துச் செல்கிறது என்று ரகுநந்தன் கூறினார். இத்தகைய பலூன்கள் பல்வேறு உயரங்களில் மாற்றப்பட்ட அழுத்தம், வெப்பநிலை, ஈரப்பதம் மற்றும் காற்றின் வேகத்தை கணக்கிட உதவுகிறது. வளிமண்டல ஒலி வரைபடங்கள் இதிலிருந்து வரையப்படுகின்றன.

இது வானிலை கணிக்க உதவுகிறது. இந்நிலையில், ஹைதராபாத் அருகே உள்ள விகாராபாத் மாவட்டத்தில் உள்ள மார்பள்ளி என்ற இடத்தில் பிற்பகலில் ஹீலியம் பலூன் ஒன்று கீழே விழுந்தது. காலையில் ஹைதராபாத் மீது பறக்கும் அதே பொருள்தான் என்று நம்பப்படுகிறது.

இதையும் படிங்க.. இமாச்சலை தட்டி தூக்கிய காங்கிரஸ்.! பாஜக கையில் எடுத்த கடைசி அஸ்திரம் - ஆட்சி அமைப்பது யார் ?

click me!