நடைமேடைக்கும், ரயிலுக்கும் இடையில் சிக்கி கொண்ட சசிகலா.. 1.30 மணிநேரம் போராடி பத்திரமாக மீட்பு..!

By vinoth kumarFirst Published Dec 8, 2022, 2:34 PM IST
Highlights

ஆந்திர மாநிலம், காக்கிநாடா மாவட்டம் அன்னவர் கிராமத்தை சேர்ந்தவர் சசிகலா(20). இவர் துவ்வாடாவில் உள்ள கல்லூரியில் எம்சிஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் தினமும் ரயிலில் கல்லூரிக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். 

கல்லூரி மாணவி ரயிலில் இறங்கும்போது கால் தவறி நடைமேடைக்கு ரயிலுக்கும் இடையில் சிக்கிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆந்திர மாநிலம், காக்கிநாடா மாவட்டம் அன்னவர் கிராமத்தை சேர்ந்தவர் சசிகலா(20). இவர் துவ்வாடாவில் உள்ள கல்லூரியில் எம்சிஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் தினமும் ரயிலில் கல்லூரிக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அதன்படி நேற்று சகிகலா வழக்கம்போல் கல்லூரிக்கு செல்வதற்காக ரயில் நிலையத்திற்கு வந்து குண்டூர் - ராயகடா விரைவு ரயிலில் ஏறி துவ்வாடாவிற்கு வந்தார்.  அப்போது, ரயில் நிற்பதற்குள் சகிகலா இறங்க முயற்பட்டுள்ளார். அப்போது, கால் தவறி ரயிலுக்கும் நடைமேடைக்கும் நடுவில் விழுந்து சிக்கிக் கொண்டு காயமடைந்து அலறி கூச்சலிட்டார். இதனையடுத்து, ரயிலும் நிறுத்தப்பட்டது.

இதையும் படிங்க;- 20 முறை கல்லால் தாக்கப்பட்ட இளைஞர்.! 3 பெண்கள், 3 ஆண்கள் சேர்ந்து போட்ட ஸ்கெட்ச்! வெளியான சிசிடிவி வீடியோ

இதுதொடர்பாக ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு ரயில்வே மீட்பு படையினர் விரைந்தனர். பல்வேறு முயற்சிகள் செய்தும் மாணவியை வெளியே எடுக்க முடியவில்லை. இறுதியில் நடைமேடையின் ஒரு பகுதியை உடைத்து சுமார்  1.30 மணிநேரம்  போராடி கல்லூரி மாணவி சசிகலாவை பத்திரமாக மீட்டனர்.  இதனையடுத்து, காயமடைந்த சசிகலா ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதனால், அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

இதையும் படிங்க;-  பள்ளி மாணவர்களின் பைகளில் ஆணுறை, சிகரெட்… பெங்களூர் பள்ளியில் மேற்கொண்ட சோதனையின் போது அதிர்ச்சி!!

click me!