
தற்போதைய நிலையில் இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்எம்ஏக்களை பாஜக கட்சி ஆபரேஷன் லோட்டஸ் முறையில் அறுவடை செய்ய முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், காங்கிரஸ் கட்சி எம்எம்ஏக்களை ஜெய்ப்பூருக்கு அழைத்துச் செல்ல காங்கிரஸ் திட்டமிட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
காங்கிரஸ் வட்டாரங்களின்படி, கட்சியில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டசபை உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக காங்கிரஸ் ராஜீவ் சுக்லா மற்றும் சில மத்திய தலைவர்களை நியமித்துள்ளது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் சிம்லா அருகே உள்ள தனது பண்ணை வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவர் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து விவாதிக்க மாநில கட்சி தலைவர்களை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க.. Gujarat Election Result 2022: மோடியின் சொந்த ஊர் தொகுதியைக் இந்த முறை கைப்பற்றுகிறது பாஜக: காங்கிரஸ் தோல்வி
தற்போதைய நிலவரப்படி, காங்கிரஸ் 39 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ஆளும் பாஜக 26 இடங்களிலும், சுயேட்சைகள் 3 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன. சுயேச்சைகள் அனைவரும் பிஜேபியில் இருந்து வெளியேறியவர்கள். டெஹ்ராவைச் சேர்ந்த ஹோஷியார் சிங், குலுவில் பஞ்சாரிலிருந்து ஹிதேஷ்வர் சிங் மற்றும் இரண்டு முறை முதல்வராக இருந்த பிரேம் குமார் துமாலின் கோட்டையான ஹமிர்பூர் சதாரில் ஆஷிஷ் போட்டியிட்டுள்ளார். ஏறக்குறைய நாற்பது ஆண்டுகளாக இமாச்சலப் பிரதேசத்தில் எந்த ஒரு கட்சியும் இரண்டாவது முறை ஆட்சியை பிடித்தது இல்லை.
முதல்வர் ஜெய் ராம் தாக்கூர், 57, மண்டி மாவட்டத்தில் உள்ள தனது கோட்டையான செராஜ் தொகுதியில் வெற்றி பெற்றார். காங்கிரஸ் முக்கிய தலைவர்களான முகேஷ் அக்னிஹோத்ரி (60), சுக்விந்தர் சுகு (58) ஆகியோர் முறையே ஹரோலி மற்றும் நடவுன் தொகுதிகளில் முன்னிலையில் உள்ளனர். பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் தற்போதைய பாஜக மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸுக்கு இடையே கடும் போட்டி நிலவும் என தெரிய வந்து இருந்தது. ஆனால், பெரிய இடைவெளி ஏற்படும் என்று கருதப்படுகிறது.
சட்டசபை தேர்தலில் முதல்முறையாக களமிறங்கிய ஆம் ஆத்மி கட்சி, குஜராத்தில் தனது வாக்கு வங்கியை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தி வந்தது. அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நண்பனும் இல்லை என்பதைப் போல சுயேட்சைகள் வெற்றி பெற்றால், மீண்டும் அவர்கள் பாஜகவுடன் இணைய மாட்டார்கள் என்று கூற முடியாது. அந்த வகையில், பாஜக, காங்கிரஸ் இடையே வெற்றி, தோல்விக்கு பெரிய வித்தியாசம் இல்லை. இதனால், காங்கிரஸ் எம்எல்ஏக்களை தக்க வைத்துக் கொள்ளும் நிலையில் காங்கிரஸ் இருக்கிறது. தொங்கு சட்டசபை ஏற்படும் நிலையில், பாஜகவும், காங்கிரசும் தங்களது உறுப்பினர்களை தக்க வைத்துக் கொள்ளும் சூழல் ஏற்படும்.
கடந்த 2017ஆம் ஆண்டில் நடந்த தேர்தலில் பாஜக 44 தொகுதிகளிலும், காங்கிரஸ் 21 தொகுதிகளிலும், மற்றவை 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்று இருந்தன. இந்த முறை பாஜகவில் உள்கட்சி பிளவு காரணமாகவும் வாக்குகள் சிதறி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இதையும் படிங்க.. Himachal Pradesh Election Results: இமாச்சல பிரதேசத்தில் தொங்கு சட்டசபை அமைகிறதா.? பாஜக Vs காங்கிரஸ் பிளான்.!!
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெற்றிக்கு இட்டுச் சென்றதா?
வேலைவாய்ப்பு: இமாச்சலப் பிரதேச இளைஞர்களுக்கு 5 லட்சம் வேலைகள் தருவதாக காங்கிரஸ் உறுதியளித்தது, அதில் 1 லட்சம் அரசு வேலைகள் வழங்க உறுதியளித்தது.
இளைஞர்கள்: ரூ.680 கோடி தொடக்க நிதியை செயல்படுத்துதல், இதற்காக மாநிலத்தில் உள்ள அனைத்து சட்டசபை பிரிவுகளுக்கும் ரூ. 10 கோடி வழங்கப்படும். இளைஞர்களுக்கு வட்டியில்லா கடன்களும் வழங்கப்படும்.
சுகாதாரம்: இமாச்சலில் 10 உத்தரவாதங்களின் ஒரு பகுதியாக இலவச மொபைல் கிளினிக்குகள் மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்த காங்கிரஸ் உறுதியளித்தது. அனைத்து கிராமங்களிலும் மொபைல் கிளினிக்குகள் திறக்கப்படும்.
கல்வி: சட்டசபை பிரிவுகளில் ஆங்கில வழி பள்ளிகளுடன் தரமான கல்விவழங்கப்படும்
விவசாயம்: மாட்டு சாணம் கிலோ ரூ.2க்கு வாங்குவதுடன், பசு மற்றும் எருமை மாடுகளை வைத்திருக்கும் உள்ளூர் மக்களிடமிருந்து 10 லிட்டர் பால் வாங்குவதாக காங்கிரஸ் உறுதியளித்தது. வருமானம் குறைந்து வருவதால் அதிக அளவில் ஓய்வில்லாமல் வளர்ந்து வரும் ஆப்பிள் தோட்டக்காரர்கள், தங்கள் பழங்களுக்கு சரியான விலையை நிர்ணயிக்க சுதந்திரம் அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. பயிர்கள் மற்றும் பழங்களுக்கு நியாயமான விலைகள் கிடைக்கும் என உறுதியளித்துள்ளது.
மின்சாரம்: அனைத்து வீடுகளுக்கும் மாதந்தோறும் 300 யூனிட்கள் வரை இலவச மின்சாரம்.
பெண்கள்: 18-60 வயதுடைய பெண்களுக்கு மாதந்தோறும் ₹1500 நிதி உதவி
மூத்த குடிமக்கள்: பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவதாக காங்கிரஸ் வாக்குறுதி அளித்தது, இதை காங்கிரஸ் ஆட்சி ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் செய்துள்ளது. 75 வயதுக்கு மேற்பட்ட குடிமக்களுக்கு சிறப்பு சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் வழங்கப்படும்.
சுற்றுலா: கிராமங்களில் சுற்றுலாவை மேம்படுத்த புதிய கொள்கை தொடங்கப்படும், "ஸ்மார்ட் வில்லேஜ்" திட்டம் தொடங்கப்படும்.
இதையும் படிங்க.. இமாச்சலை தட்டி தூக்கிய காங்கிரஸ்.! பாஜக கையில் எடுத்த கடைசி அஸ்திரம் - ஆட்சி அமைப்பது யார் ?