குஜராத் மாநிலத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் அசுரப் பெரும்பான்மையுடன் பாஜக 7வது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது. குஜராத்தில் தொடர்ந்து 27ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியை நடத்த உள்ளது பாஜக.
குஜராத் மாநிலத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் அசுரப் பெரும்பான்மையுடன் பாஜக 7வது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது. குஜராத்தில் தொடர்ந்து 27ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியை நடத்த உள்ளது பாஜக.
இதுவரை 5 சுற்று வாக்குகள் முடிந்தநிலையில் குஜராத்தில் 155 இடங்களில் பாஜக முன்னிலை பெற்று பெரும்பான்மைக்கு தேவையான 94 இடங்களைவிட அதிகமாகப் பெற்றுள்ளது.
குஜராத்தில் உள்ள 182 சட்டசபைத் தொகுதிகளுக்கும் டிசம்பர் 1ம் தேதி 89 தொகுதிகளுக்கும் மற்றும் 5ம் தேதி93 தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது. இன்று காலை முதல் 33 மாவட்டங்களில் 37 மையங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள், தேர்தல் பார்வையாளர்கள் முன் சீல் உடைக்கப்பட்டு 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன
வாக்கு எண்ணிக்கை தொடக்கத்தில்இருந்தே பாஜக அரிதிப்பெரும்பான்மையுடன் நகர்ந்து வந்தது. ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவிலும் பாஜக பெரும்பான்மையுடன் முன்னோக்கிச் சென்றது. கடும்போட்டியளிப்பார்கள் என கருதப்பட்ட காங்கிரஸ், ஆம்ஆத்மி கட்சிகள் பின்னடைவைச் சந்தித்தன.
5 சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் பாஜக 155 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் 53 சதவீத வாக்குகளை பாஜக பெற்றுள்ளது.
காங்கிரஸ் கட்சி 18 தொகுதகிளில் முன்னிலையுடனும், ஆம்ஆத்மி கட்சி 6 தொகுதிகளில் முன்னிலையுடனும் நகர்ந்து வருகின்றன. இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் 27 சதவீதத்தை காங்கிரஸ் கட்சி பெற்றுள்ளது, ஆம் ஆத்மி கட்சி 13 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. சுயேட்சை வேட்பாளர்கள் 3 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளனர்.
இதே நிலைநீடித்தால், பாஜக வரலாற்று வெற்றி பெற்று தனது முந்தைய சாதனையை முறியடிக்கும். இதற்கு முன் கடைசியாக 127 இடங்களை கடந்த 2002ம் ஆண்டு தேர்தலில் பாஜக பெற்றிருந்தது. அந்த எண்ணிக்கையை பாஜக முறியடிக்கும்.
அது மட்டுமல்லாமல், குஜராத் சட்டசபைத் தேர்தல் வரலாற்றில் இதுவரை அதிகபட்சமான இடங்களை ஒரு கட்சி பெற்றது என்றால் அது காங்கிரஸ் கட்சிதான். கடந்த 1985ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சி மாதவின்ஷ் சோலங்கி தலைமையில் 145 இடங்களில் வென்றது. இந்த எண்ணிக்கையை பாஜக இந்த முறை முறியடித்தால் குஜராத்தில் அதிகமான இடங்களை வென்ற கட்சி என்று புதிய வரலாற்றைப் படைக்கும்.
அது மட்டுமல்லாமல் இந்தியாவில் ஒரு மாநிலத்தில் அதிகமுறை ஆண்ட கட்சி என்றால் மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சியைத்தான் கூற முடியும். ஏறக்குறைய 34 ஆண்டுகள் மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி செய்தது.
இப்போது பாஜக 7வதுமுறையாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தால் 27ஆண்டுகளை நிறைவு செய்யும். அடுத்தத் தேர்தல் வரும்போது, 32 ஆண்டுகளை எட்டும். ஒரு மாநிலத்தில் அதிக ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆண்ட கட்சி என்ற பெருமையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குப்பின் பாஜக பெறும்.
குஜராத் தேர்தல் முடிவு : பாஜக புதிய வரலாறு ! ஜடேஜா மனைவி, மேவானி, படேல் முன்னிலை
கடந்த 1995ம் ஆண்டிலிருந்து குஜராத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் பாஜக தோல்வி அடைந்ததே இல்லை. இந்நிலையில் 7வது முறையாக தேர்தலில் வென்று பாஜக ஆட்சி அமைப்பது அந்தக் கட்சிக்கு மிகப்பெரிய ஊக்கத்தை அளிக்கும், தீர்மாக ரீதியாக மிகப்பெரிய நம்பிக்கையை அளிக்கும்.
இந்த நம்பிக்கையும், உற்சாகமும், அடுத்துவரும் 2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள பாஜகவுக்கு உதவியாக இருக்கும். பணவீக்கம், பொருளாதார வளர்ச்சிக் குறைவு, வேலையின்மை உள்ளிட்ட பொருளாதாரச் சிக்கல்களை எதிர்கொண்டபோதிலும் குஜராத்தில் பாஜகவுக்கு மவும், மக்கள் மத்தியில் ஆதரவும் குறையவில்லை.
காங்கிரஸ்கட்சியைப் பொறுத்தவரை கடந்த 2002ம் ஆண்டு தேர்தலில் 51 இடங்களில் இருந்தநிலையில் அதன்பின் நடந்த 2007ம் ஆண்டு தேர்தலில் 59 இடங்கள், 2012-ல்66 இடங்கள், 2017ம் ஆண்டில் 77 இடங்களில் வென்று ஒவ்வொரு முறையும் தங்களை மேம்படுத்திக்கொண்டுதான் இருந்தது.
குஜராத் தேர்தல் முடிவு: கம்யூனிஸ்ட்டுக்கு அடுத்து பாஜக! கொண்டாட்டம் ஆரம்பம்
ஆனால் இந்த முறை பாஜகவின் மிகப்பெரிய எழுச்சி, பிரதமர் மோடியின் புயல்வேகப் பயணம், அனல்பறக்கம் பிரச்சாரத்துக்கு காங்கிரஸ் கட்சியால் ஈடு கொடுக்க முடியவில்லை. காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களான ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சோனியா காந்திய ஆகியோரும் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டவி்ல்லை.
கடந்த 2017ம் ஆண்டுதேர்தலில் ராகுல் காந்தி வீட்டுக்குவீடு சென்று பிரச்சாரம் செய்தார்ஆனால், 77 இடங்கள் மட்டும்தான் கிடைத்தது. ஆனால், இந்த பாரத் ஜோடோ யாத்திரையில் கவனம் செலுத்தியதால், காங்கிரஸ் கட்சி கடந்த 2002ம் ஆண்டுக்குப்பின் மிகக்குறைவான இடங்களைப் பெற உள்ளது.
ஆம் ஆத்மி கட்சியைப் பொறுத்தவரை கருத்துக்கணிப்புகளில் ஒருசில இடங்கள் மட்டுமே கிடைக்கும், கிடைக்காமலும் போகலாம் என்று தகவல்கள் வந்தன. ஆனால், ஏறக்குறைய 13 சதவீத வாக்குகளுடன் ஆம்ஆத்மி கட்சி 5 தொகுதிகளில் முன்னிலையில் இருப்பது அரவிந்த் கெஜ்ரிவால் பிரச்சாரத்துக்கு மக்கள் செவிகொடுத்துள்ளார்கள் என்பதையே காட்டுகிறது.
குஜராத் தேர்தல் முடிவு: ஆம் ஆத்மி முதல் வேட்பாளர் இசுதான் காத்வி முன்னிலை
அதுமட்டுமல்லாமல் 2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கும், பிரதமர் மோடியின் பிரச்சாரத்துக்கும் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மிகப்பெரிய சவாலாகவும், அச்சுறுத்தலையும் தருவார் எனத் தெரிகிறது.
இந்த தேர்தலில் காங்கிரஸில் இருந்து பாஜகவில் சில மாதங்களுக்கு முன் சேர்ந்த,பட்டிதார் இனத் தலைவர் ஹர்திக் படேல், அல்பேஷ் தாக்கூர் ஆகியோரும் முன்னிலையுடன் உள்ளனர். புர்னேஷ் மோடி, கனுபாய் தேசாய், முதல்வர் பூபேந்திர படேல், உள்துறை அமைச்சர் ஹர்ஸ் சங்வி ஆகியோரும் வெற்றியை நோக்கி நகர்ந்துள்ளனர்.
மோடியின் சொந்த ஊர் தொகுதியைக் இந்த முறை கைப்பற்றுகிறது பாஜக: காங்கிரஸ் தோல்வி
காங்கிரஸ் கட்சியின் முக்கிய முகங்களாக அறியப்பட்ட ஜிக்னேஷ் மேவானி வட்கம் தொகுதியிலும், அம்ரேலி தொகுதியில் பரேஷ் தனானி ஆகியோரும் பின்னடைவைச் சந்தித்துள்ளனர். காங்கிரஸ் மூத்த தலைவர் அர்ஜூன் மோத்வாடியா போர்பந்தர் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்
ஆம்ஆத்மி கட்சியின் முதல்வேட்பாளர் இசுதான் காத்வி கம்பாலியா தொகுதியில் தொடக்கத்தில் முன்னிலையில் சென்று தற்போது பின்தங்கியுள்ளார். ஆம்ஆத்மி வேட்பாளர்கல், தீதாபாடா, கிரியாதார், ஜாம்ஜோத்பூர், விசாவடார், போடாட், பிலோடா ஆகிய தொகுதிகளில் முன்னிலையில் உள்ளனர்.