ஆயுதப்படை வீரர், விண்வெளி விஞ்ஞானி மற்றும் விளையாட்டு நட்சத்திரங்கள் ஒருவரையொருவர் சந்தித்து சாதனைகளைப் பாராட்டிப் பேசிய தேசத்தின் பன்முகத்தன்மை மற்றும் ஒற்றுமையின் அடித்தளத்தை எடுத்துக்காட்டுகிறது.
இந்தியாவின் உண்மையான ஹீரோக்கள் எல்லைகளைக் கடந்து ஒன்று கூடிய அபூர்மான நிகழ்வு தலைநகர் டெல்லியில் நடந்துள்ளது. தேசத்தின் சாதனைகளைக் கொண்டாடவும், ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொள்ளவும் இந்தியாவின் மூன்று துறைகளின் சாதனையாளர்கள் ஒன்றுகூடியுள்ளனர்.
ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கின் தலைவர் ராஜேஷ் கல்ரா, டெல்லி உள்ள அலுவலகத்தில் நடந்த இந்த அற்புதமான தருணத்தைப்பற்றி ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். தேசபக்தியின் வெளிப்பாடாக விளையாட்டு, விண்வெளி ஆய்வு மற்றும் ஆயுதப் படையைச் சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து பரஸ்பரம் பாராட்டுகளைக் கூறிக்கொண்டனர்.
undefined
சமீபத்தில் சந்திரயான்-3 வெற்றியின் மூலம் விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவின் புகழை புதிய உச்சத்துக்குக் கொண்டு சென்ற இஸ்ரோ தலைவர் எஸ்.சோமநாத், ஓய்வுபெற்ற ஏர் மார்ஷல் சூரஜ் குமார் ஜா, சீனாவில் நடந்துவரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் பேட்மிண்டன் நட்சத்திரங்களுக்குத் தலைமை தாங்கும் பேட்மிண்டன் பயிற்சியாளர் புல்லேலா கோபிசந்த் ஆகியோர் ஒரே நேரத்தில் காணொளி காட்சி மூலம் சந்தித்து மகிழ்ச்சியாக உரையாடினர்.
பெண்கள் முன்னேற்றத்துக்குக் குரல் கொடுத்த எம்.எஸ்.சுவாமிநாதன்: மகள் சௌம்யா சுவாமிநாதன் பெருமிதம்
A PRICELESS moment in the office yesterday when our badminton superstars, who people get all excited to see and meet, got even more excited to see our space hero, ISRO chairman S Somnath, albeit on a video call between Delhi and Hangzhou where the badminton team currently is for… pic.twitter.com/6mS4k7kVy4
— Rajesh Kalra (@rajeshkalra)பல மைல்களுக்கு அப்பால் இருந்தபோதிலும், அவர்களுடைய தேசப்பற்று ஒரு வீடியோ அழைப்பு மூலம் அவர்களை நெருக்கமாக்கியது. இஸ்ரோவின் தலைவர் மற்றும் ஓய்வுபெற்ற ஏர் மார்ஷல் இருவரையும் ஒரே நேரத்தில் சந்தித்த மகிழ்ச்சியில் பேட்மிண்டன் நட்சத்திரங்கள் அனைவரும் தங்கள் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர். இதனால், இருபுறமும் மகிழ்ச்சியில் நிறைந்தது.
இந்த மறக்கமுடியாத வெர்சுவல் சந்திப்பின்போது மூன்று துறைகளைச் சேர்ந்தவர்களும் மற்ற துறைகளில் இந்தியா நிகழ்ச்சியிருக்கும் சாதனைகளை மாறி மாறி பாராட்டிப் பேசியது இதனை இன்னும் தனித்துவமான நிகழ்வாக ஆக்கியிருக்கிறது.
"நேற்று அலுவலகத்தில் ஒரு விலைமதிப்பற்ற தருணம். இந்திய பேட்மிண்டன் அணி தற்போது ஆசிய விளையாட்டுப் போட்டியில் உள்ளது. எங்களுடன் இஸ்ரோ தலைவர் எஸ். சோம்நாத் மற்றும் ஓய்வு பெற்ற ஏர் மார்ஷல் சூரஜ் ஜாவும் அவர்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தனர். நமது தேசத்தின் உண்மையான ஹீரோக்களைக் காண்பதும் - ஆயுதப் படை, விண்வெளி ஆய்வு மற்றும் விளையாட்டுத்துறை நட்சத்திரங்கள் ஒருவரையொருவர் பாராட்டியதை விவரிக்க முடியாதது. ஜெய் ஹிந்த்!" என்று ராஜேஷ் கல்ரா தனது ட்விட்டர் பதிவில் எழுதியுள்ளார்.
ஆயுதப்படை வீரர், விண்வெளி விஞ்ஞானி மற்றும் விளையாட்டு நட்சத்திரங்கள் ஒருவரையொருவர் சந்தித்து சாதனைகளைப் பாராட்டிப் பேசிய தேசத்தின் பன்முகத்தன்மை மற்றும் ஒற்றுமையின் அடித்தளத்தை எடுத்துக்காட்டுகிறது. பல்வேறு துறைகளில் இந்தியாவைப் பெருமைப்படுத்த வேண்டும் என்ற உறுதியைக் கொண்டாடிய தருணம் இது. இந்த மனதைக் கவரும் சந்திப்பு, தேசத்திற்கு அவர்கள் ஆற்றிய பங்களிப்புகளை நினைவூட்டுகிறது. அவர்கள் பிரபஞ்சத்தை ஆராய்ந்தாலும், நாட்டு எல்லைகளைப் பாதுகாத்தாலும், விளையாட்டில் சாதித்தாலும் அவை அனைத்தும் இந்தியாவின் வெற்றியாக அமைகின்றன.
375 வருடமாக கடலுக்கு அடியில் காணாமல் போயிருந்த 8வது கண்டம் கண்டுபிடிப்பு!