தென்மேற்கு பருவமழை அடுத்த இரண்டு நாட்களில் கேரளாவில் தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்த ஆண்டுக்கான தென்மேற்கு பருவமழை ஜூன் 4 ஆம் தேதி தொடங்கும் என்று இந்திய வானிலை மையம் ஏற்கனவே கணித்திருந்தது. ஆனால் தென்மேற்கு பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. ஆனால் தற்போதைய நிலவரப்படி, அடுத்த 48 மணி நேரத்தில் பருவமழை கேரளாவில் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 5 நாட்களுக்கு, கடலோர மற்றும் வடக்கு உள்துறை கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெப்ப அலை எச்சரிக்கை:
மேலும், வடமேற்கு இந்தியாவில் அதிகபட்ச வெப்பநிலை அடுத்த ஐந்து நாட்களில் இரண்டு முதல் நான்கு டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கலாம் என்றும் இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. மத்திய இந்தியாவில் வெப்பநிலை அதிகரித்து காணப்படலாம் என்றும், பீகார், மேற்கு வங்கம், கிழக்கு ஜார்கண்ட், ஆந்திரப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அடுத்த ஐந்து நாட்களுக்கு வெப்பம் அலை இருக்கும்.
தெற்கு அரபிக்கடலின் மேலும் சில பகுதிகள், லட்சத்தீவுகள், தென்மேற்கு, மத்திய மற்றும் வடகிழக்கு வங்கக்கடல் குதிகள் மற்றும் சில பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் உருவாகி உள்ளது.
இந்தியாவின் வடமேற்கில் மழை இயல்பானது முதல் இயல்பை விட குறைவாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும், கிழக்கு, வடகிழக்கு, மத்திய இந்தியா மற்றும் தெற்கு தீபகற்பத்தில், சாதாரண மழைப்பொழிவு நீண்ட கால சராசரியான 87 சென்டிமீட்டரில் 94-106% என கணிக்கப்பட்டுள்ளது.
பைபர்ஜாய் புயல்:
பைபர்ர்ஜாய், கிழக்கு மத்திய இந்தியா மற்றும் கோவா அருகே அருகிலுள்ள தென்கிழக்கு அரபிக் கடலில் மையம் கொண்டுள்ள புயல், அடுத்த 12 மணி நேரத்தில் " தீவிர புயலாக" மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்“அடுத்த 12 மணி நேரத்தில் இது மிகவும் தீவிரமான சூறாவளி புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட வடக்கு நோக்கி நகரும், பின்னர் அடுத்த மூன்று நாட்களில் வடக்கு-வடமேற்கு நோக்கி நகரும். அரபிக்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் கரைக்குத் திரும்ப அறிவுறுத்தப்படுகிறார்கள்.“ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கப்போகுது - எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?