‘எஸ்.பி.ஐ. ஊழியர்களுக்கு ஏப்பம் விட கட்டுப்பாடு’ - வங்கி நிர்வாகத்தின் கிடுக்குப்பிடி உத்தரவால் அதிர்ச்சி

Asianet News Tamil  
Published : Jan 09, 2018, 05:49 PM ISTUpdated : Sep 19, 2018, 01:48 AM IST
‘எஸ்.பி.ஐ. ஊழியர்களுக்கு ஏப்பம் விட கட்டுப்பாடு’ - வங்கி நிர்வாகத்தின் கிடுக்குப்பிடி உத்தரவால் அதிர்ச்சி

சுருக்கம்

When a review meeting is done you should avoid bumps

ஆய்வுக் கூட்டம் நடக்கும் போது, ஏப்பம் விடுவதைத் தவிர்க்க வேண்டும், நேர்த்தியான ஆடைகள் , ‘ஷூ’ அணிந்து வர வேண்டும் உள்ளிட்ட பல நடத்தை விதிமுறைகளை பாரத ஸ்டேட் வங்கி தனது ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க ஆப் இந்தியாவின் (எஸ்.பி.ஐ.) மனித வளத்துறை கடந்த 6-ந்தேதி தனது ஊழியர்களுக்கு சில கட்டுப்பாடுகளையும், அறிவுரைகளையும் வழங்கியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது-

பணியாற்றும் இடத்தில் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவில் நல் ஒழுக்கத்தை கடைபிடிக்க, அனைத்து ஊழியர்களும் ஆடைக் கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும். வாடிக்கையாளர்களிடம் உரையாற்றும்போது, வங்கியின் சார்பில் உணர்ச்சிகரமான மதிப்பையும், சேவையின் தோற்றத்தையும் ஊழியர்கள் பங்களிப்பு செய்கிறார்கள். ஒவ்வொரு ஊழியரும் வங்கியின் தூதுவர்களே. ஊழியர்களின் தோற்றும் வங்கியின் தோற்றத்தில் பிரதிபலிப்பை, தாக்கத்தை ஏற்படுத்தும்.

டி.சர்ட், ஜீன்ஸ் தடை

ஆண் ஊழியர்கள் அனைவரும் செருப்புகள் அணிந்து வருவதற்கு பதிலாக சுத்தமான, நன்கு பாலிஷ்செய்யப்பட்ட ‘ஷூ’ அணியலாம். ‘டி’ சர்ட், ஜீன்ஸ், ‘ஸ்போர்ட்ஸ் ஷூ’, ‘ஸ்னீக்கர் ஷூ’ அணிந்து வருவதை தவிர்க்கலாம். மூத்த நிர்வாக அதிகாரிகள் வாடிக்கையாளர்களை சந்திக்கும் போது, மிகவும் நேர்த்தியான ஆடைகளை அணியலாம் .

முழு, அரைக்கை சட்டை

அதாவது முழுக்கை, அரைக் கை சட்டை அணிந்துவர வேண்டும். (ஸ்மார்ட் பார்மல்ஸ்). மூத்த பெண் உயர் அதிகாரிகள் இந்திய பாரம்பரிய உடை, அல்லது மேற்கத்திய ஆடைகளை அணிந்து வர வேண்டும்.

சவரம் செய்து தலைவாருங்கள்

ஆண் ஊழியர்கள் முகத்தை சவரம் செய்யாமல், தலைமுடியை சரியாக வாராமல் சோம்பலான தோற்றத்தில் இருப்பதை தவிர்க்க வேண்்டும். முடிந்தவரை தன் சுத்தத்தையும், உடலிலும், வாயிலும் துர்நாற்றம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். காலணிகளை எப்போதும் சுத்தமாக வைத்து இருக்க வேண்டும்.

மேலும், ஆண்கள் அணியும் ஷூ, பெல்ட் இரண்டும் ஒரே நிறத்தில் இருக்க வேண்டும், பேண்ட்டுக்குஏற்றார்போல் காலுறை அணிய வேண்டும். கட்டம் போட்ட சட்டை அணிந்தால் பிளைன் டை அணியலாம், ஒரே நிறமுள்ள சட்டைக்கு வண்ணங்கள் கொண்ட டை அணியலாம்.

ஏப்பம் விடாதீர்கள்

குறிப்பாக வங்கியின் சார்பில் நடக்கும் ஆய்வுக் கூட்டங்கள், கூட்டங்களில் கலந்து கொள்ளும் ஊழியர்கள் மற்றவர்கள் முகம் சுளிக்கும் வகையில் ஏப்பம் விடுவதை தவிர்க்க வேண்டும். இது மற்றவர்களுக்கு மிகவும் எரிச்சலை ஏற்படுத்தும். மேலும், முறைப்படியான கூட்டங்களில் ஊழியர்கள் பங்கேற்கும் போது, சாதாரண மொழி நடையில் பேசுவதைத் தவிர்த்து அதற்குரிய அனுமதிக்கப்பட்ட மொழி நடையில் பேச வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

பள்ளிகள் மாணவர்களுக்கு செய்தித்தாள் வாசிப்பு கட்டாயம்! உ.பி. அரசு அதிரடி உத்தரவு!
அதிசயம்! 10வது மாடியில் இருந்து விழுந்தும் உயிர் தப்பிய முதியவர்.. குஜராத்தில் பகீர் சம்பவம்!