
கள்ளக் காதலனுடன் படுகையில் சேர்ந்து இருந்ததை கணவர் நேரில் பார்த்ததால் ஆத்திரம் அடைந்த பெண், கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரின் கழுத்தை அறுத்த சம்பவம் பேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தானே பிவண்டி சாந்திநகர் பகுதியை சேர்ந்த மனோஜ்குமார். இவரது மனைவி குல்ஸ்பா இவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. மனோஜ்குமார் வேலை விஷயமாக அடிக்கடி வெளியூர் செல்வதால் வீட்டில் தனிமையில் இருந்த குல்ஸ்பாவுக்கு அந்த பகுதியை சேர்ந்த ரிஸ்வான் என்ற வாலிபருடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் தினமும் தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர்.
இரண்டு மாதங்களுக்குப்பின், வெளியூரில் இருந்து மனோஜ்குமார் வீடு திரும்பி உள்ளார். அப்போது, கள்ளக்காதலன் ரிஸ்வானுடன் வீட்டில் உல்லாசமாக இருந்த காட்சியை பார்த்து நேராடியாக பார்த்த மனோஜ்குமார் அதிர்ச்சியில் உறைந்தார்.
மேலும் இருவரையும் கடுமையாக கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த குல்ஸ்பாவும், ரிஸ்வானும் சேர்ந்து மனோஜ்குமாரை சரமாரியாக தாக்கி கீழே தள்ளினர். பின்னர் வீட்டில் இருந்த கத்தியால் மனோஜ்குமாரின் கழுத்தை அறுத்து சாய்த்தார். பின்னர் இருவரும் வீட்டில் இருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இந்த தகவல் அறிந்ததும் போலீசார் மனோஜ்குமாரின் வீட்டிற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய, குல்ஸ்பா மற்றும் அவரது கள்ளக்காதலன் ரிஸ்வான் இருவரையும் வலைவீசி தேடிவருகின்றனர்.